காஜல் அகர்வால் - கிச்லு தம்பதிக்கு குழந்தை பிறந்தது..!

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தது.

காஜல் அகர்வால் - கிச்லு தம்பதிக்கு குழந்தை பிறந்தது..!

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னனி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர், “பழனி”  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார். 

அதுமட்டுமில்லாமல் காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களிடம் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார். இப்படி அடுத்தடுத்து சினிமா வாழ்கையில் பிஸியாக இருந்த காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பிரபல தொழிலதிபரான கவுதம் கிச்லு என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் காஜல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். 

ஆனால் காஜல் அகர்வால் இடை இடையே பதிவிட்டு வந்த புகைப்படங்கள் இணையவாசிகளுக்கு அவர் கர்ப்பமாக இருப்பதை தெரியப்படுத்தியது. அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படத்துடன் கூடிய பதிவை காஜல் அகர்வாலின் கணவர் வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வந்தனர். 

அதற்கு பிறகு தனது கர்ப்பகாலத்தில் எடுத்த போட்டோ ஷூட்களை சமூக வலைதளத்தில் அவ்வப்போது காஜல் பதிவிட்டுவந்தார். இந்நிலையில் காஜல் அகர்வால் - கிச்லு தம்பதிக்கு கடவுளின் ஆசியுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.