டிரெஸிங் ரூமுக்குள் புகுந்த கேமிராமேன்...ஷிவானியின் கவர்ச்சி போட்டோவை கழுவி உத்தும் நெட்டிசன்கள்...!!

டிரெஸிங் ரூமுக்குள் புகுந்த கேமிராமேன்...ஷிவானியின் கவர்ச்சி போட்டோவை கழுவி உத்தும் நெட்டிசன்கள்...!!

பிக் பாஸ் நான்காம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை ஷிவானி. இவர் சமீபகாலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வந்தது. 

ஷிவானியின்  போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கு என்றே அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம். ஆம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 20 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றாலே அவர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு வந்துவிடும். இப்படி ஒரு நிலையில் ஷிவானிக்கும் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதுவும் முதல் படத்திலேயே கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. நடிகர் கமல் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பில் முக்கியதுவம் காட்டி வரும் இவர், சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை மட்டும் தவறாமல் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் உடைமாற்றும் அறையில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தின் கமென்ட்ஸில் டிரையல் ரூமுக்குள் எப்படி கேமராமேன் நுழைந்தார்? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


ஷாருக்கான் தான் முக்கியமாம்..அல்லுக்கு ஷாக்..புஷ்பா 2-ல் இருந்து விலக என்ன காரணம்?

பாலிவுட்டில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி..!

புஷ்பா: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. தமிழ், தெலுங்கு, மலையாள, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது இப்படம். தெலுங்கு மொழியை தவிர்த்து பிற மொழிகளில் ஓரளவு வெற்றி பெற்றது புஷ்பா. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது. 

புஷ்பா 2: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழு தயாராகினர். சுகுமார் இயக்கத்தில், சீனா, தாய்லாந்து என நாடு நாடாக சென்று படக்குழுவினர் பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த பாகத்தில் தனது சாம்ராஜ்யத்தை எப்படி புஷ்பா விரிவுபடுத்தினார்? என்பது தான் மையக்கதை எனக் கூறப்படுகிறது. 

வில்லன் விஜய்சேதுபதி: நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவைக் காட்டிலும் வில்லன் கதாபாத்திரங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறார். 'விக்ரம் வேதா' தொடங்கி, சமீபத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வரையிலும் முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாய் நடித்து அசரடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

பிறமொழிகளிலும் வில்லன்: தமிழ் மட்டுமின்றி ஒரு பான் இந்தியா வில்லனாக மாறியிருக்கிறார் விஜய்சேதுபதி. பாலிவுட்டில் தொடங்கி டோலிவுட் வரை அவர் வில்லனாக நடித்தால் தான் நன்றாக இருக்கும் என போட்டி போட்டு அவரது கால்ஷீட்களை புக் செய்து வருகின்றனர். சம்பளம் டபுள் மடங்கு ஏறினாலும் அவரை புக் செய்ய தயாரிப்பாளர்கள் காத்துகிடக்கின்றனர். 

 

புஷ்பா2-க்கு நோ: இந்த நிலையில், அல்லு அர்ஜூனின் புஷ்பா 2- படத்தில் முதலாவதாக விஜய்சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் புஷ்பா 2- படத்திலிருந்து விலகி இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. 

ஷாருக்கானுக்கு யெஸ்: புஷ்பா 2-படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அசைப் போட்ட நேரத்தில், ஏற்கனவே ஹிந்தியில் ஷாருக்கானின் "ஜவான்" படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பதால், புஷ்பா 2- படத்திற்கு அதே நேரத்தில் கால் ஷீட் கொடுக்க முடியாததால் அப்படத்திலிருந்து விலகியுள்ளதாக விவரம் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர். 

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு வரும் 26-ம் தேதி வரை காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சர்ச்சை பேசிய ஸ்டண்ட் மாஸ்டர்:

சென்னை மதுரவாயலில் கடந்த ஒன்றாம் தேதி, இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்கும் நாளே, இந்துக்களின் எழுச்சி நாள் என்றார். இது குறித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அளித்த புகாரின் பேரில் கனல் கண்ணன் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

தலைமறைவான கனல் கண்ணன்:

கனல் கண்ணன் மீது தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுவதை அறிந்து கனல் கண்ணன் தலைமறைவானார்.  இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, கனல்கண்ணன் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கைதான கனல் கண்ணன்:

இந்நிலையில், தலைமறைவான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் புதுச்சேரிக்கு  அவரை தேடி சென்றனர்.  இதனையடுத்து, 76 வது சுதந்திர தினவிழாவையொட்டி இன்று புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல்கண்ணனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜார்:

இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி, வரும் 26-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் புழல் சிறைக்கு கொண்டு சென்ற போது,  கனல் கண்ணன் ஆதரவாளர்கள் வாகனத்தை வழி மறித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்:

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், ஜாமீன் கேட்டு  மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் நாளை மனு விசாரணைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

அது மட்டும் வேணாம்..சிம்பு சொன்ன நோ.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

பத்துதல, வெந்து தணிந்தது காடு படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்பு..!

பிசியாகவுள்ள சிம்பு: நடிகர் சிம்பு தற்போது பத்துதல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ஹன்சிகாவின் மஹா படத்திலும் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. 

மதுபான விளம்பரமும் சிம்புவின் பதிலும்: இந்த நிலையில், நடிகர் சிம்புவிடம் பிரபல மதுபான நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரப் படங்களில் நடிக்குமாறு அணுகியுள்ளது. ஆனால் இதற்கு சிம்பு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

 

உடல் ஆரோக்கியம் முக்கியம்: கடந்த ஒன்றைரை வருடங்களாக சிம்பு தனது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் ஈடுபட்டிருந்தார். உடல் பயிற்சி, யோகா, நடனம் என பல வழிகளில் கடுமையாக உழைத்து தற்போது ஒரு சிறுவன் வயதுக்கு வந்துள்ளார் சிம்பு. இந்த நேரத்தில் மக்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் மதுபான விளம்பரத்தில் தான் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒரு நாள் முதல்வனின் 60வது பிறந்தநாள் இன்று!

நாட்டுப் பற்றுக் கொண்ட இந்திய நடிகர்களில் முதன்மை வகிக்கும் அர்ஜுன் சார்ஜாவின் 60 வது பிறந்தநாள் இன்று!

நாட்டுப் பற்று நிறைந்தவர்கள் பலர். ஆனால், அனைவரது மனதில் எடுத்துக் காட்டாக நிலைத்து நிற்கும் பற்றாளர் ஒரு சிலரே. அந்த வகையில், என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு நடிகர் யார் என்றால்ம் அது அர்ஜுன் தான். அவரது தேசப்பற்று எந்தளவு என்று கேட்டால், இந்தியா சுதந்திரம் அடைந்த அதே நாளில் தனது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் என்றால் பாருங்கள்.

இது வரை 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அர்ஜுன் படங்களில், வழக்கமான ஹீரோக்களுக்கு தேவையான காதல், குடும்ப செண்டிமெண்ட் போன்றவை தாண்டி, மக்கள் நலம், தேசப்பற்று ஆகியவையும் நிரைந்திருக்கும். ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் ஆசையாக அழைக்கப்படும் அர்ஜுன், முதன் முதலில் தமிழ் திரையுலகிற்கு காலெடுத்து வைத்தது ‘நன்றி’ என்ற படம் மூலமாகத் தான்.

கன்னடத்தில் இருந்து வந்த இவரது தமிழ் வித்தியாசமாக இருந்தாலும், பலரால் ரசிக்கப்பட்டது. அவரது உடலமைப்பு, உடல்கட்டு அனைத்தும் பலரால் ரசிக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அவர் ரசிகர்களை குவித்தது, தேசப்பற்று படங்கள் மூலமாகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம், தான் ஒரு கமெசியல் ஹீரோ தான் என நிரூபித்தார். தொடர்ந்து பல படங்கள் ஆக்‌ஷன் ஹீரோவாகக் கொடுத்து, இந்திய அளவில் பார்வைப் பெற்றது, அதே ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘முதல்வன்’ படம் தான். ஒரு நாள் முதல்வன் என்ற கதைகளம், மிகவும் வித்தியாசமாக பலராலும் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர் கூட்டம் அதிகரித்தது என்றே சொல்லலாம்.

1981இல் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய அர்ஜுன், தனது தேசப்பற்றை, சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கையில், தேசியக்கொடியை பச்சைக் குத்தியிருக்கிறார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்.  இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

2023இல் திரையரங்குகளைத் தெரிக்க விட வருகிறது ‘சலார்’!!!

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படமானது, வருகிற 2023ம் ஆண்டு திரையரங்குகளுக்கு வருவதாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய படங்களுக்கான ஒரு முகப்பாக அமைந்த ‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அக்குழு அப்படியே இணைந்து உருவாக்கும் புதிய படம் தான் சலார்.

2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான வெற்றித் திரைப்படம் தான் ‘கே.ஜி.எஃப்’. பிரஷாந்த் நீல் இயக்கி, விஜய் கிரகண்டூரின் ஹொம்பாலெ ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியானது. அந்த படம் பல நூறு கோடி ஐந்து மொழிகளில் செய்ததோடு, மாபெரும் வசூல் சாதனையும் செய்தது.

இந்நிலையில், படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக இருப்பதாக திடீரென வந்த அப்டேட், அனைத்து சினிமா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, மாபெரும் வரவேற்பும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து, படத்தில் ஒரு கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும், நல்ல வரவேற்புப் பெற்றது. அது தான் சலார்!

அந்த கதாபாத்திரத்திற்கென்று தற்போது ஒஎரு தனி ‘Spin Off' உருவாக இருப்பதாகவும், அந்த கதையின் நாயகனாக, பிரபல பான் இந்தியா நட்சத்திரமான பாகுபலி பிரபாஸ் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி பெரும் வரவேற்பு மக்களிடையே வெளியானது. இதனைத் தொடர்ந்து, tஹற்போது, சலார் படம், வருகிற செப்டம்பர் 28ம் தேதி, 2023ம் ஆண்டு வெளியாகவுள்ளதாக, ஹொம்பாலெ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த படத்தில், கே.ஜி.எஃப் குழுவுடன், பிரித்விராஜ், ஷ்ருதிஹாசன், ஜகபதிபாபு, சிரியா ரெட்டி, ஆகியோரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.