
பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் மாஸ்டகளின் நடனக்குழுவில் நடன கலைஞராக பணியாற்றியவர். பின்னர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் நடன இயக்குநராக செய்த முஸ்தஃபா', கல்லூரிச் சாலை' ஆகிய பாடல்கள் மூலம் முன்னணி இடத்திற்கு வந்தார். பின்னர் அஜித், விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமானார்.
நடன இயக்குநர் கூல் ஜெயந்த் இதுவரை 500 படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கூல் ஜெயந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.