
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைசுவை நடிகராக இருப்பவர் வடிவேலு, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பில் போது இயக்குனர் ஷங்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் படத்தில் நடிக்க மறுத்து வெளியேறினார்.. இதை தொடர்ந்து படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.. இதனால், அவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை.. சமீபத்தில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து தடையும் நீக்கப்பட்டது.இதையடுத்து வடிவேலு படங்களில் நடிக்க தொடங்கினார்..
தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.. இந்நிலையில், இயங்குனர் கவுதம் மேனன் படத்தின் நடிக்க வடிவேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.. இது குறித்து கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில்" வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவது குறித்து பேட்சுவார்த்தை நடந்து வருகிறது... அந்த படம் காதல் நகைசுவை படமாக இருக்கும்" என்றார்.