சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்...!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள, பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்...!

டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்  அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.  முன்னதாக நெல்சன் இயக்கத்தில் தனது  எதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுத்தந்தது. அதனை தொடர்ந்து கடந்த மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் டான். அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூரியா, சிவாங்கி, ஆர் ஜே விஜய், சூரி, சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்திருகின்றனர். 

காதல், காமெடி, அப்பா செண்டிமெண்ட் என கலவையாக உருவான இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த டான் திரைப்படம் வெளியான 12 நாட்களிலேயே உலக அளவில் 100 கோடி வசூலை வாரி குவித்தது. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் sk. 

அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் kv இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். காரைக்குடி, பாண்டிச்சேரி என விறு விறுப்பாக நடந்து வந்த படிப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. சுரேஷ் ப்ரோடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் sk க்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம், முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆகஸ்ட் 2வது வாரத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம். சிம்புவின் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. 

பொதுவாக தனது படங்களை தனியாக வெளியிட விரும்புவார் sk. அந்த வகையில் இந்த படத்தின் வெளியீட்டு தேதியும் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் விடீயோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் அனுதீப் kv, சிவகார்த்திகேயன், சத்யராஜ், மற்றும் மரியா ஆகியோர் உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், அதனை ஷேர் செய்து படத்திற்காக காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.