அனல் பறந்த முதல் நாள்.. அப்படியே ஆஃப் ஆன இரண்டாம் நாள்.. ட்ரிம் செய்ய படக்குழு முடிவு.. எவ்வளவு நேரம்?

வலிமை படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவ செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனல் பறந்த முதல் நாள்.. அப்படியே ஆஃப் ஆன இரண்டாம் நாள்.. ட்ரிம் செய்ய படக்குழு முடிவு.. எவ்வளவு நேரம்?

வலிமை படத்தின் இரண்டாம் பாகத்தில் ரசிகர்கள் போதும் டா சாமி என்று புலம்பி வரும் நிலையில், படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவ செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் ஆக்க்ஷன் மற்றும் பாசம் கலந்து அசத்தலாக வெளியான படம் தான் "வலிமை".. இப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. இரண்டு வருட காத்திருப்பு காரணமாக ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்து வந்த நிலையில், படம் ஏமாற்றம் தந்துள்ளதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு என்றே மட்டுமே படத்தை பார்க்கலாம்  என்ற விதத்தில் படத்தின்  ஆக்‌ஷன் மற்றும் பைக் பிரியர்களுக்காகவே உருவாக்கப்பட்டது மட்டும் தான் ஹைலைட்டும் ஆறுதலும். அதே நேரத்தில், படத்தின் இரண்டாம் பாகம் நீண்ட நேரம் இழுத்து செல்வது மட்டுமே படத்திற்கு பலவீனம் என பலரும் கருது தெரிவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார் மற்றும் பட குழுவிற்கு இந்த செய்து தெரியவந்ததையடுத்து, அவர்கள் அதனை ஏற்று கொண்டு படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக நெருங்கிய சினமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 மணி நேரம் 55 நிமிடங்கள் இருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்தை தமிழில் இரண்டாம் பாதியில் 12 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்ய வலிமை பட குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங் முதல் நாளில் அனல் பறந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு அந்த அளவிற்கு டிக்கெட் புக்கிங் செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக வலிமை படக்குழு இந்த முடிவை எடுத்துதுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் எந்த காட்சிகள் நீக்கப்பட்டன என்ற தகவல் கிடைத்து விடும் என தெரிகிறது.