விஜய்யின் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது....டைட்டில் இதுதான்...!

விஜய்யின் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது....டைட்டில் இதுதான்...!

தளபதி 66 படத்தின் புதிய அப்டேட் இன்று 6 மணிக்கு வெளியாக உள்ளது என கடந்த ஞாயிறன்று படக்குழு தரப்பில் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

முன்னதாக நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைந்தது. அதன் பிறகு, தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தில் ராஜு தயாரிக்கிறார். மெகா பட்ஜெட் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.  இதில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. 

மேலும், படத்தின் படப்பிடிப்பானது ஏப்ரல் 6 தேதி பூஜையுடன் துவங்கப்பட்டு, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த schedule முடிவடைந்ததாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் 6 பாடல்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. வம்சி படங்கள் பொதுவாக ஃபேமிலி ட்ராமாவாகவே உருவாக்கப்பட்டு வரும் நிலையில், தளபதி 66, ஒரு செண்டிமெண்ட் கதையாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.  இப்படி இருக்க தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளியானது. இதனை தடுக்க படக்குழுவினர் தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், சில காட்சிகளை மீண்டும் படமாக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. 

நாளை விஜய்யின் பிறந்தநாள் என்பதால் தளபதி 66 குறித்த ஏதாவது அப்டேட்டை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக இன்றே ஒரு அப்டேட்டை வெளியிட இருப்பதாக படக்குழு கடந்த ஞாயிறன்று தெரிவித்தது. இப்படி இருக்க அதன் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், He is returning என கேப்ஷனிட்டு தளபதியின் புகைப்படத்துடன் வெளியிட்டது. அதனால் ரசிகர்கள் ட்விட்டரில் thalapathy 66flday என்ற hastag யை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

 

இந்நிலையில் இன்று படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரோடு  படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி தளபதி 66 படத்திற்கு வாரிசு என பெயர் வைக்க பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாகவும், கெத்தாகவும் அமர்ந்திருப்பது போல அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தப்படம்  2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை விஜயின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், காமன் டிபி க்களையும், வீடியோ எடிட்களையும் தெறிக்கவிட்டு வரும் நிலையில் தற்போது இந்த போஸ்ட்டரையும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.