பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கின்றனர்.! பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!!

பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருப்பதாக பிரபல நடிகை ஒருவர் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கின்றனர்.! பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து!!
Published on
Updated on
2 min read

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும், சர்ச்சைக்கு பேர் போனவரும் தான் நடிகை கங்கனா ரனாவத். சமூக வலைதளங்களிலும் சரி, பேட்டிகளிலும் சரி, பொது மேடைகளிலும் சரி சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது பேசுபவர் நடிகை கங்கனா ரணவத். தமிழில் ‘தலைவி’ திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாபத்திரத்தை மிக சிறப்பாக நடித்திருந்த இவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் ரசிகர்களோடு ஒன்றிணைய முடியவில்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வெளிநாட்டில் படித்து, ஆங்கிலம் மட்டுமே பேசி, ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்த்து வளர்கின்றனர். பின் திடீரென பாலிவுட் படங்களில் நடிப்பதால் அவர்கள் ரசிகர்களுடன் ஒன்றிணைய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் தென்னிந்திய சினிமாக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றும், தென்னிந்திய ஹீரோக்கள் ரசிகர்களோடு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்றும், அதனால்தான் பாலிவுட் படங்களை விட தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

அத்துடன் பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் அவித்த முட்டை போன்று இருக்கிறார்கள் என்றும், நான் யாரையும் தவறாக சித்தரிக்க வேண்டும் என்று கூறவில்லை என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களின் வாரிசுகள் குறித்து இவரின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com