தி லெஜெண்ட் படத்தின் கன்னட ட்ரெயிலரை வெளியிட்டார் ராய் லக்ஷ்மி:

தி லெஜெண்ட் படத்தின் கன்னட படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டார் நடிகை ராய் லக்ஷ்மி. டாக்டர் எஸ் தி லெஜெண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெயிலரானது மாலை 4 மணி அளவில் வெளியிடப்பட்டது.

தி லெஜெண்ட் படத்தின் கன்னட ட்ரெயிலரை வெளியிட்டார் ராய் லக்ஷ்மி:

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தயாரிப்பில், தி லெஜெண்ட் சரவணா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் தான் தி லெஜெண்ட். ஜேடி, ஜெர்ரி இயக்கிய இந்த படத்தின் மாசான பாடல்களை, ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கி, வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் பாடல் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, நடன இயக்குனர்களாக, ராஜு சுந்தரம், பிருந்தா, தினேஷ் போன்றவர்களும், ஸ்டண்ட்சுக்கு அனல் அரசும் இணைந்து, பிரம்மாண்ட படக்குழு கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறார் தி லெஜெண்ட் சரவண அருள்.

The Legend (2022) - IMDb

இந்த படம் தான் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதி படமாக அமைந்த நிலையில், அவருடன், பிரபு, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், விஜயகுமார், போன்ற பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ் ட்ரெயிலர் மே 29ம் தேதி வெளியாகிய நிலையில், தமிழ் பட ரசிகர்கள் பலரும் பல வகையான நல்ல கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

The Legend Motion Poster feat. Saravanan, Harris Jayaraj's music Tamil Movie,  Music Reviews and News

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த தி லெஜெண்ட் படத்தின் தெலுங்கு ட்ரெயிலரை நடிகை தமன்னா வெளியிட்ட நிலையில், படத்தின் இந்தி உரிமத்தை நம்பி ராஜனின் கணேஷ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பெற்றது.

இந்த படத்திற்கு, டாக்டர் எஸ் தி லெஜெண்ட் எனப் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், 90ஸ் குழந்தைகளின் மனம் கவர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெய்ராஜின் ரீ எண்ட்ரி படமாக அமைந்துள்ள இந்த தி லெஜெண்ட் படத்திற்காக ரசிகர்கள் மிக ஆர்வமாகக் காத்து வருகின்றனர்.