வெளியானது 'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ... !

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து 'ராட்ஸச மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.

வெளியானது 'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ...  !

எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ள பொன்னின் செல்வன் திரைப்படம் திரைப்படத்துக்கான அப்டேட்ஸை படக்குழு அதிகாரபூர்வமாக வழங்கி வருகின்றன. மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகியுள்ள ஒரு வரலாற்று திரைப்படம். 1950 களில் ஒரு பத்திரிகை தொடராக வெளிவந்த கல்கியின் புகழ்பெற்ற நாவல் தான் பொன்னியின் செல்வன். இந்த நாவலை அடிப்படையாக கொண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

லைக்கா ப்ரோடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த தகவல்களையும் படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டீசர் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 6 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

திரைப்படத்திலிருந்து, சோழா சோழா மற்றும் பொன்னி நதி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான நிலையில், தற்போது  'ராட்சஸ மாமனே' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. குழந்தைகளின் கோரஸ் குரல் மற்றும் நடனத்தில் "மொத்தத்திலே சித்தத்திலே  தித்தித்திட வந்தேன் "  என தொடங்குகிறது. இந்த பாடல், பாடலாசிரியர் கபிலரின் வரிகளில் ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயக்ராம் ஆகியோரது குரலில் உருவாகியுள்ளது. மேலும் வெளியான ஒரு மணி நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை திரையில் காண ரசிகர்கள் வெகு ஆர்வமாக காத்து வருகின்றனர்.