என் பேர யூஸ் பண்ணி மோசடி செய்துவரும் முன்னாள் கணவன்!!பிரபல கானா பாடகியான இசைவாணி பரபரப்பு புகார்...

கடந்து வந்த பாதை டாஸ்க்கில் இசைவாணி சொல்லாத உண்மை...
என் பேர யூஸ் பண்ணி மோசடி செய்துவரும் முன்னாள் கணவன்!!பிரபல கானா பாடகியான இசைவாணி பரபரப்பு புகார்...
Published on
Updated on
2 min read

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற  போட்டியாளர்களில் ஒருவரான இசைவாணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது விவாகரத்தான முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

சென்னை ராயாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இசைவாணி. கானா பாடகர் ஆன  இவர் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுடன் இணைந்து பாடிவந்தார். இசைக்குழுவில் சேர்ந்ததன் மூலம், இசைவாணி உலகின் முதல் தொழில்முறை பெண் கானா பாடகர்களில் ஒருவரானார். மேலும் கானாவை ஆண்களால் மட்டுமே கலைப்படைப்பாகப் பாதுகாக்க முடியும் என்று நினைத்தவர்களிடம் பெண்ணாலையும் சாதிக்கமுடியும் என்பதை நிருபித்ட்தார். 2020 ஆம் ஆண்டில் பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராக தேர்வுசெய்யபட்டார் இசைவாணி. 

இதனைத்தொடர்ந்து கானா பாடகி இசைவாணி கடந்த 2019ஆம் ஆண்டு சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்  விவாகரத்து செய்துள்ளனர். 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இசைவாணி, கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் இசைவாணி தனக்கு திருமணமானதையோ, விவாகரத்து ஆனதையோ கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது போட்டியிலிருந்து வெளியேறிய இசைவாணி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தனது விவாகரத்தான முன்னாள் கணவர் மீது மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் விவாகரத்தான தனது முன்னாள் கணவர் தனது பெயரை பயன்படுத்தி ஆர்கெஸ்ட்ரா ஒன்றை நடத்தி வருவதாகவும், மேலும் தனது பெயரில் சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி அதில் மோசடி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவாகரத்துப் பெற்ற பின்னரும் தன்னை மனைவி என்று அவர் பலரிடம் கூறி வருவதாகவும் இது குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com