நீதிபதியின் கருத்து தன்னை குற்றவாளி போல் காட்டுகிறது- நடிகர் விஜய் வேதனை

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதியின் கருத்து தன்னை குற்றவாளி போல் காண்பிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு, நுழைவு வரிவிலக்கு கேட்டு நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இதனை எதிர்த்து விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் தனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்துள்ள நடிகர் விஜய், நிலுவை வரித்தொகையான 32 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்தி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.  

ஏற்கனவே இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதியின் கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும்,  வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறியிருப்பது  தேவையற்றது எனவும், தன்னை தேச விரோதியாக நீதிபதி கூறியது தவறு எனவும் கூறியுள்ளார்.