சமந்தா போலவே அச்சு அசலாக இருக்கும் நடிகை சம்யுக்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

சமந்தா போலவே அச்சு அசலாக இருக்கும் நடிகை சம்யுக்தா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறப்பவர் தான் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் தனது விடுமுறை நாட்களை கழிப்பதற்காக சுவிட்சர்லாந் சென்று வந்தார். இவர் தற்போது  ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா என ஏராளமான படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அச்சு அசலாக நடிகை சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே நடிகர், நடிகைகள் போலவே அச்சு அசலாக இருக்கும் நபர்களின் புகைப்படங்கள், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகும். அந்த வகையில் நடிகை சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை ஒருவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த இளம் நடிகை வேறு யாருமில்லை, மலையாளத்தில் பிரபலமான  நடிகை சம்யுக்தா மேனன் தான். இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தமிழில் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா புகைப்படத்தை அச்சு அசலாக நடிகை சமந்தா போலவே இருப்பதாக கூறி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.