அஜித் ரசிகர்களுக்கு சுட சுட அடுத்த அப்டேட்...அதுவும் இன்று பிற்பகல் 2 மணிக்கு...!

அஜித் ரசிகர்களுக்கு சுட சுட அடுத்த அப்டேட்...அதுவும் இன்று பிற்பகல் 2 மணிக்கு...!
Published on
Updated on
1 min read

துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

துணிவு:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடிப்பில், பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”துணிவு”. இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள 3வது திரைப்படம் துணிவு. கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை. இந்தப்படம் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், பொதுவான ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. 

இசையமைத்த ஜிப்ரான்:

இந்நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணியில் வரும் பொங்கலுக்கு திரையரங்களில் வெளியாகவுள்ள ”துணிவு” திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

சில்லா...சில்லா பாடல்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “Chilla Chilla” வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் குரலில் வெளியான இப்பாடல் யூடியூப்பில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

2வது சிங்கிள் பாடல்:

இந்நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்   வெளியிட்டுள்ளார். அதில், “காசேதான் கடவுளடா” என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் எனவும், ”பணம், பணம், பணம்!! இது அனைத்தும் பணத்தைப் பற்றியது” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து நடிகர் அஜித்தின் ரசிகர்கள் டிவிட்டரில் காசே தான் கடவுளடா என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com