சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ’பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட்; என்ன தெரியுமா?

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ’பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட்; என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர். ரசிகர்களால்  ’தளபதி’ என்று அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு.

இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாக உள்ள  ‘பீஸ்ட்’ படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் விரைவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்றும், குறிப்பாக இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தின் சூப்பர் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் ‘பீஸ்ட்’ அப்டேட் என்னவாக இருக்கும்? என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர். ஏற்கனவே வந்த தகவலின் படி ’பீஸ்ட்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை தான் சூப்பர் அப்டேட்டாக அறிவிக்கப்போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்ளிடம் நிலவி வருகிறது.