முதலிடம் பிடித்த பல்கலைகழகம்... கொண்டாடி தீர்த்த மாணவர்கள்!

முதலிடம் பிடித்த பல்கலைகழகம்... கொண்டாடி தீர்த்த மாணவர்கள்!
Published on
Updated on
2 min read

சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சவீதா பல்கலைக்கழகம் இந்திய அளவில் முதலிடம் பிடித்ததை கொண்டாடும் விதமாக மாணவர்கள் உற்சாகமாக நடனம் ஆடியது அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது.

லண்டனை சேர்ந்த யுஎஸ் நிறுவனம் பல்கலைக்கழகங்களுக்கான முன்னிலை தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. கல்வி நிறுவனத்தின் நன்மதிப்பு கல்வியின் தரம், மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் சவிதா பல் மருத்துவமனை இந்திய அளவில் முதல் இடத்தையும் சர்வதேச அளவில் 13 வது இடத்தையும் பிடித்திருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக பல் மருத்துவ கல்லூரி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன கல்லூரியின் வேந்தர் வீரய்யன் அவர்களை  பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் வரவேற்று அவருக்கு கிரீடம் அணிவித்து செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு இசைப் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினர். மாணவர்கள் மட்டுமல்லாது மருத்துவர்களும் கலந்து கொண்டு தங்களின் கலை திறமையை வெளிப்படுத்தினர். தங்கள் கல்லூரி முதலிடம் பிடித்ததை கொண்டாடும் விதமாக மாணவர்களின் கொண்டாட்ட நடனமும் மேளதாள இசையும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக அமைந்தது.

மேலும் கல்லூரி முதலிடம் பிடித்ததை பறைசாற்றும் விதமாக பதாகைகளை சவிதா பல்கலைக்கழக வேந்தர் வீரன் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com