பவர் ரேஞ்சரின் சோக முடிவு ; அதிர்ச்சியில் 90'ஸ் கிட்ஸ் ரசிகர்கள்... 

பவர் ரேஞ்சரின் சோக முடிவு ; அதிர்ச்சியில் 90'ஸ் கிட்ஸ் ரசிகர்கள்... 
Published on
Updated on
2 min read

பிரபல உலக புகழ் பெற்ற 90'ஸ் கீட்ஸின் சூப்பர் ஷோ பவர் ரேஞ்சர்ஸ் ஹீரோ ஜேசன் டேவிட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பவர் ரேஞ்சர்ஸ் ஹீரோ ஜேசன் :

உலகை அழிக்க வரும் தீய சக்திகளை பவர் ரேஞ்சர்ஸ் குழுவினர் அழிப்பார்கள். இது சாகச சீரீஸ் என்பதால் 90கே, 2கே கிட்ஸ்கள் இடையே பிரபலமானது.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் 90 களில் ஒரு மாற்றம் வந்தது.குழந்தைகளின் மனம் கவர்ந்த சூப்பர் ஹீரோவாக இருந்தவர் ஜேசன் டேவிட் ஃபிராங்க். புகழ்பெற்ற நடிகர், மார்ஷியல் ஆர்டிஸ்ட். கிரீன் ரேஞ்சர் பின்னர் ஒயிட் ரேஞ்சராக நடித்து புகழ்பெற்றார்.இவர் தற்காப்பு கலைகளில் பல விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 90'ஸ் களில் குழந்தைகள் விரும்பி பார்க்கப்பட்ட ஷோக்களில் பவர் ரேஞ்சர்ஸ் ஒன்று.அதில் கிறீன் ரேஞ்சர் ஆக நடித்து இருந்த ஜேசன் டேவிட் (20.11.2022) அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவர் 1993 முதல் 1996 வரை ‘மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரில் ஃபிராங்க், டாமி ஆலிவராக சுமார் 124 எபிசோடுகளில் நடித்திருக்கிறார். பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  இவர் டேக்வாண்டோ, கராத்தே போன்ற தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். இவருக்கு வயது தற்போது 49.இவரது மரணம் குறித்தான தகவல் இன்னும் வெளியாகவில்லை.போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இவருக்கு இரண்டு திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து  வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் "RIP DAVID" என்ற ட்வீட் பதிவு வைரலாகி வருகிறது.இவரது இழப்பு அவரது ரசிகரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

---ஸ்வாதிஸ்ரீ 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com