புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்.!!

மாநாடு படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது.

புதிய சாதனை படைத்த மாநாடு டிரெய்லர்.!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் மாநாடு.  இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.  மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

அதன்படி இப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.