அஜித்தை தொடர்ந்து அசத்தலாக விமானம் ஓட்டிய தமிழ் நடிகர்..! யார் தெரியுமா?

அஜித்தை அடுத்து விமானம் ஓட்டும் தமிழ் நடிகர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தை தொடர்ந்து அசத்தலாக விமானம் ஓட்டிய தமிழ் நடிகர்..! யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமா நடிகர்களில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர் யாரென்றால் அது அஜித் மட்டும் தான். நடிகர் அஜித் பைக் மற்றும் விமானம் இரண்டையும் சர்வசாதரணமாக ஓட்டுபவர். இவருக்கு அடுத்தபடியாக இதுவரை யாரும் விமானம் ஓட்டும் லைசென்ஸை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது  நடிகர் வினய், விமானம் ஓட்டும் வீடியோ ஒன்றை  அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு ’உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். அதன் பிறகு ’ஜெயம்கொண்டான்’, ’மிரட்டல்’, ’என்றென்றும் புன்னகை’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த வினய், மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டினார். அதன்பின்னர் ’டாக்டர்’ , ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்த இவர், தற்போதும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இதனிடையே இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த விமானம் ஓட்டும் வீடியோ, இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு வினய்யை திருமணம் செய்ய போகும் நடிகை விமலா ராமன், உங்கள் கனவு நிஜமாகிவிட்டது என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

View this post on Instagram

A post shared by Vinay Rai (@vinayrai79)

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com