கே.ஜி.எப் - ல் ஹீரோ ராக்கி பாய்க்கு அம்மாவாக நடிச்சவங்களா இவங்க..! இவ்ளோ கியூட்டா இருக்காங்களே..! வைரலாகும் புகைப்படங்கள்

கே.ஜி.எப் 1 மற்றும் 2 -ல் ஹீரோ யாஷ்க்கு அம்மாவாக நடித்த நடிகை அர்ச்சனா ஜோய்ஸின் டிரெண்டிங் புகைப்படங்களை பார்த்து ராக்கி பாயோட அம்மாவா நடிச்சவங்களா இது.. என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 

கே.ஜி.எப் - ல் ஹீரோ ராக்கி பாய்க்கு அம்மாவாக நடிச்சவங்களா இவங்க..! இவ்ளோ கியூட்டா இருக்காங்களே..! வைரலாகும் புகைப்படங்கள்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கே.ஜி.எப் 2 மிகப்பெரிய அளவில் வெற்றியை ஈட்டியுள்ளது. ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு வெற்றியை கண்டுள்ளது.

இந்நிலையில் கே.ஜி.எப் 1 மற்றும் 2 -ல் ராக்கி பாய்க்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. என்னடா படத்தில் அம்மாவா நடித்தவர் திடீரென டிரெண்டாகி வருகிறார் என்று பார்த்தால், அவரா இவர் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது நடிகை அர்ச்சனா ஜோய்ஸின் கியூட் புகைப்படங்கள். 

ஆமாம், இவருக்கு வயது வெறும் 27 தானாம்.  கன்னட தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தவரை அதற்குள் படத்தில் அம்மாவாக நடிக்க வைத்து வைத்திருக்கிறார் பிரசாந்த் நீல். என்னதான் நடிகை அர்ச்சனா ஜோய்ஸ் அம்மாவாக நடிக்கவைக்கப்பட்டிருந்தாலும், கேஜிஎஃப் படத்தின் கதைக்கே முக்கிய காரணம் இவரது கதாபாத்திரம் தான் என்பது படம் பார்த்த அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். அம்மாவின் ஆசைக்காக உலகில் உள்ள அனைத்து தங்கங்களையும் தனதாக்கும் முயற்சியில் தான் கோலார் தங்க சுரங்கத்திற்கே டானாக மாறுகிறார் ராக்கி பாய். இவருடைய கதாபத்திரம் தான் படத்தின் திருப்புமுனையாக அமைந்திருக்கும்.

இந்நிலையில் இணையத்தில் வைரலாகும் அர்ச்சனா ஜோய்ஸின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை பார்த்து அசந்து போயுள்ளனர். இப்படி செம க்யூட்டாக இருப்பவரையா அப்படி டார்க் மேக்கப் போட்டு நடிக்க வச்சாரு என இயக்குனர் பிரசாந்த் நீல் மீது செல்லமாக கோபித்து வருகின்றனர். அதுமட்டுமில்லங்க, கே.ஜி.எப் படத்தில் ஹீரோயினா நடிச்ச ஸ்ரீநிதி ஷெட்டியை ஓரங்கட்டி விட்டு அம்மா கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனா தான் எங்களுடைய புதிய கிரஷ்ன்னு சொல்றாங்க நம்ம ரசிகர்கள்.

அதுமட்டுமா பார்க்கவே செம க்யூட்டாக இருக்கும் அர்ச்சனா ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி அவரது போட்டோக்களை டிரெண்ட் செய்து மீம்களையும் போட்டு வருகின்றனர். மேலும், இந்த ஒரு கதாபாத்திரம் இல்லை என்றால், கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகம் வந்திருக்கவே வந்திருக்காதே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.