படத்தை விமர்சனம் செய்பவர்கள் இந்த நாட்டுக்கே தேவையில்லை...அஸ்வினுக்காக ஷகிலா ஆவேசம்!!

படத்தை விமர்சனம் செய்பவர்கள் இந்த நாட்டுக்கே தேவையில்லை...அஸ்வினுக்காக ஷகிலா ஆவேசம்!!

நடிகை ஷகிலா, தனது 16 வயதில் சினிமா துறையில் நுழைந்தவர். இவர் மலையாளத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்து பிரபலமானவர். தமிழில் தூள், வாத்தியார், ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இதனைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு கவர்ச்சி நடிகை என்ற தனது இமேஜை மாற்றிக் கொண்டவர் நடிகை ஷகிலா. இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வினின்  ‘என்ன சொல்லப் போகிறாய்’ படம் குறித்து தனது கருத்தை ஷகிலா தெரிவித்துள்ளார்.

’என்ன சொல்ல போகிறாய்’ படம் நன்றாக இருக்கிறது என்றும், இந்த படம் நன்றாக இல்லை என்று சொன்னால் உங்கள் கண்களில் தான் தவறு இருக்கிறது என்றும், அஸ்வின் மிகவும் அழகாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்துள்ளார் என்றும், அதேபோல் படத்தில் உள்ள இரண்டு ஹீரோயின்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றும் ஷகிலா கூறியுள்ளார்.

அஸ்வின் படத்தின் Press Meet-ல்  இதுவரை 40 படங்களை நான் புறக்கணித்து இருக்கிறேன் என்று சொல்லி உங்கள் வாயிக்கு அவல் தந்துவிட்டார், அதனால் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு அவரை விமர்சனம் செய்கிறீர்கள், ஒரு படத்தைத் குறை சொல்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படத்தை விமர்சனம் செய்கிறேன் என்று இஷ்டத்திற்கு பேசக்கூடாது என்றும், அப்படி விமர்சனம் செய்பவர்கள் இந்த நாட்டுக்கே தேவையில்லாதவர்கள் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார் ஷகிலா. மேலும் இந்த படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும் என்று கூறியவர்களுக்கு நான் ஒரு கேள்வியை கேட்கிறேன், ஒரு படத்தை எல்லோரும் ஒருமுறை தான் பார்ப்பார்கள். திரும்ப திரும்ப ஒரே படத்தை பார்க்க எல்லாரும் வேலைவெட்டி இல்லாதவர்களா? என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.