உங்களுடைய மோசமான வீடியோ இதுதான்... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...

பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லாத நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாகி உள்ளது.

உங்களுடைய மோசமான வீடியோ இதுதான்... வனிதாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா அவர்களின் மகளான வனிதா 1995இல் விஜய் நடித்த சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம் என்ற ஒரு படத்தில் நடித்தார் அவர். இரண்டு படங்களும் பெரிய அளவில் அவருக்கு பெயரை பெற்றுத் தரவில்லை. அதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி நடிகர் ஆகாஷ் என்பவரை 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவர்களது அவர்கள் திருமணம் 2000 வருடத்தில் நடைபெற்றது. அதன் பிறகு 2007இல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார் வனிதா. பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார். அந்த திருமணமும் சில வருடங்களில் முடிவுக்கு வந்தது.

வனிதா, 40 வயதில் பீட்டர் பால் என்பவரை 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதும் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அவரையும் பிரிந்த வனிதா விஜயகுமார் மீது பல்வேறு தரப்பிலும் இருந்து வந்தவண்ணம் இருந்தது.  இந்நிலையில் தான் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீஃப் பிரியாணி செய்யும் வீடியோ வெளியிட்டு இருந்தார். மலபார் பீஃப் பிரியாணி செய்வது எப்படி என்று வீடியோ தயாரித்து அதன் யூ டியூப் பக்கத்தில் வனிதா வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோதான் தற்போது இன்ஸ்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ பார்த்த பலர் மலபார் பீஃப் பிரியாணி நன்றாக இருக்கும். அதை செய்வதும் எளிது. உங்களின் ரெசிபி நன்றாக இருக்கிறது. எளிதாக இருக்கிறது என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் இந்த வீடியோவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதன்படி இப்படி பீஃப் சமைத்து அதை வீடியோவாக போடலாமா? நீங்கள் எல்லாம் இந்துவா? அதை பார்க்கவே கோபமாக வருகிறது. வனிதா நீங்கள் வெளியிட்ட மோசமான வீடியோ இதுதான் என்று சிலர் கமெண்ட் செய்துள்ளனர். வனிதாவை கடுமையாக விமர்சனம் செய்தும் சிலர் கமெண்ட் செய்து இருக்கிறார்.

தொடர்ந்து பலர் நெகட்டிவ் கமெண்ட் செய்து வருவதால் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி உள்ளது. இந்த நிலையில் வனிதா இந்த சர்ச்சைக்கு கூலாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், மக்களே சில். என்ன ஆச்சு உங்களுக்கு. என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் நிறைய மலையாளிகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளனர். இது வெறும் ரெசிபிதான்.

நான் 7 வயதில் இருந்து அமெரிக்காவில் வளர்ந்தவள். இதனால் எனக்கு பல நாட்டு உணவுகள் அறிமுகம். சிறிய வயதில் இருந்து பல வகை உணவுகளை சாப்பிட்டு இருக்கிறேன். நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். அதை பிறர் மீது திணிக்க கூடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வீடியோவில் என் மகள் சொன்னது போல உங்களுக்கு பிடித்த விஷயத்தை வைத்து இதே பிரியாணியை சமைத்துக் கொள்ளலாம் என்று வனிதா குறிப்பிட்டுள்ளார்.