
தெலுங்கு வெப்சீரிஸில் நடித்து வரும் திரிஷா போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரைப்பயணத்தில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருபவர் திரிஷா.
இவர் தற்போது தெலுங்கில் தயாராகும் பிருந்தா என்ற புதிய வெப்சீரிஸில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், காவல்துறை அதிகாரியாக காக்கி உடையில் கலக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.