விஜய்யின் 'பீஸ்ட்’ படத்துடன் மோதவிருக்கும் இரண்டு பெரிய படங்கள்...! அப்படி நடந்தால் வசூல் பாதிக்கப்படுமா...?

விஜய்யின் 'பீஸ்ட்’ படத்துடன் மோதவிருக்கும் இரண்டு பெரிய படங்கள்...! அப்படி நடந்தால் வசூல் பாதிக்கப்படுமா...?
Published on
Updated on
2 min read

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ’பீஸ்ட்’ படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியானால் இரண்டு பெரிய படங்களின் மோதலை சந்திக்கவேண்டி இருக்கும் என வட்டாரங்கள் மத்தியில் கிசுகிசுகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்,  இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் யாஷ் நடிப்பில் உருவான  ’கேஜிஎப் 2’  திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதே தினத்தில் அமீர்கான் நடித்த ’லால்சிங் சாதா’ என்ற திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஒரே நாளில் மூன்று பெரிய படங்கள் ரிலீசானால் என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள்  சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அப்படி ஒருவேளை மூன்று படங்களும் ஒரே தேதியில் ரிலீஸானால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்று தகவல் கூறுகின்றது.

கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் ‘பீஸ்ட்’ படத்தின் வசூல் ’கேஜிஎப் 2’  ரிலீஸால் பாதிப்படையும், அதே சமயம், ’கேஜிஎப் 2’ படத்தின் வசூல் தமிழகம் மற்றும் கேரளாவில் ‘பீஸ்ட்’  ரிலீஸால் பாதிப்படையும். அதுபோலவே ’கேஜிஎப் 2’ படத்தின் வசூல், ‘லால்சிங் சாதா’ ரிலீஸால் வட இந்திய மாநிலங்களில் பாதிக்கும் என்றும் தகவல் கூறுகின்றது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com