அடிக்கடி இருப்பிடத்தை மாற்றும் மீராமிதுன்...திணறும் போலீசார்...நீதிபதி சொன்னது என்ன?

அடிக்கடி இருப்பிடத்தை மாற்றும் மீராமிதுன்...திணறும் போலீசார்...நீதிபதி சொன்னது என்ன?

நடிகை மீராமிதுன் தனது இருப்பிடத்தை  அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால் கைது செய்ய முடியாத நிலை உள்ளதாக  காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவதூறு வழக்கில் கைதான மீராமிதுன்:

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும்,  அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

அடிக்கடி இருப்பிடத்தை மாற்றும் மீராமிதுன்:

பின்னர்  ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருவதால், மீராமிதுனை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர்.

இதையும் படிக்க: பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன??!!

வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி:

இதனையடுத்து கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் வாரண்ட் நிலுவையில் இருப்பதாகவும், காவல்துறை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததார்.