லிப் லாக் ஃபோட்டாவை அனுப்பிய ரசிகர்.. கூல்லாக பதில் சொன்ன வனிதா

லிப் லாக் ஃபோட்டாவை அனுப்பிய ரசிகர்.. கூல்லாக பதில் சொன்ன வனிதா
Published on
Updated on
1 min read

நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் பீட்டர்பால் என்பவரை காதலித்து 3-வது திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து சின்னத்திரையில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். வனிதா தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஒருவர், வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணத்தின் போது எடுத்த லிப் லாக் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த வனிதா, நான் எப்போதும் நேசிக்கப்படுபவள் என்பதை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. 

காதல் என்பது ஒரு அழகான விஷயம். மற்றவர்கள் உங்கள் அன்புக்கு தகுதியானவர்கள் இல்லை அல்லது சூழ்நிலை சரியாக இல்லை என்றால் விலகி செல்ல வேண்டும். உங்களுக்கு உங்களைப் போன்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இது புரியாது என பதிலளித்துள்ளார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com