”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்...குஷியில் ரசிகர்கள்!

”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்...குஷியில் ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

”வாரிசு” திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ”வாரிசு”. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. 

ரஞ்சிதமே பாடல்:

இதனிடையே, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “ரங்சிதமே” பாடல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன் இசையில் நடிகர் விஜயின் குரலில் வெளியான இந்த பாடல், 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்க்கொடி தூக்கிய சங்கம்:

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “வாரிசு” பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால்,  பொங்கலுக்கு ( தெலுங்கில் சங்கராந்தி) ”வாரிசு” படத்தை தெலுங்கு திரையுலகில் வெளியிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பியது. அன்றைய தினம் எங்களுடைய தெலுங்கு படத்தை தான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போர்க்கொடி தூக்கியதாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு திரையரங்குகள் கிடைக்காததாலும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியானது.

இதையும் படிக்க: "டும் டும் டும்"....காதல் ஜோடிக்கு எளிமையான முறையில் நடந்து முடிந்த திருமணம்...

அடுத்தடுத்த பிரச்னை:

விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு பங்சமே இருக்காது என்பது தெரிந்த ஒன்றே, அதில் “வாரிசு” மட்டும் விதிவிலக்கல்ல. திரையிடுவதில் ஏற்பட்ட பிரச்னையையடுத்து, படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி வந்தனர். அதன்படி, வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வரும் நிலையில், உரிய அனுமதி பெறாமல் யானைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

படக்குழுவினற்கு நோட்டீஸ்:

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரச்னையான நிலையில், வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி யானையை பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

படக்குழுவின் முடிவு என்ன?:

“வாரிசு” படத்திற்கு அடுத்தடுத்து வரும் பிரச்னையில் இந்த விவகாரம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், விலங்குகள் நல வாரியத்திற்கு விளக்கம் அளிக்க படக்குழு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியானது. அந்த வகையில் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தவில்லை எனவும் பூஜைக்கு மட்டுமே அழைத்துவரப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட இருப்பதாகவும், மேலும் யானைகளை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சிகளை சேர்க்கலாமா எனவும் தயாரிப்பு தரப்பு தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:

இந்நிலையில் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்புகளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை, வாரிசு படத்தை பிரிட்டனில் விநியோகம் செய்யும் அகிம்சா என்டர்டைன்மென்ட் ”வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்ற அறிவிப்பை சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானதும் ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


அயலி பேசும் புரட்சி...
1. பெண் கல்வி
2. குழந்தைத் திருமணம்
3. Myths of மாதவிடாய்
4. சம்பிரதாய அடக்குமுறை
5. ஊர் கட்டுப்பாடு
6. குடும்ப கௌரவம்
7. Domestic violence
8. குலதெய்வம்
9. பெண் சுதந்திரம்
10. தெய்வகுத்தம்
11. கட்டாய திருமணம்
12. தாலி sentiment..
பெண்களுக்காக பெரியார் பேசுன அத்தனையையும் பேசியிருக்கு இந்த webseries..
இதையெல்லாம் documentray மாதிரி இல்லாம, ஒரு நல்ல feel good கதையா சொன்னதுக்காகவே இயக்குனர் முத்துக்குமாரை பாராட்டனும்.
வசனங்கள் எல்லாம்.

ZEE5 to premiere new Tamil series 'Ayali' | Mint

புரட்சிகரமான கருத்துகளை ரொம்ப யதார்த்தமான சூழல்கள்லயே மனசை தைக்குரமாதிரி சொல்லியிருக்காங்க.

  Ayali Review: రివ్యూ: అయలీ.. దేవత దర్శనం ఆ అమ్మాయిలకేనా?

மேலும் படிக்க| பாஜகவுடனான உறவு.... ஏலம்.... ஊழல்வாதிகள்

"எங்கெல்லாம் 'பெண்' என்பதற்காகவே அவள் கல்வி, உரிமை, உணர்வு நசுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கலாச்சாரம், கட்டுப்பாடு பேசிக் கொண்டிருக்கும்  ஆண்களின் வேட்டியை உருவி திரையாகக் கட்டிக் காட்ட வேண்டிய காவியம் 'அயலி' "..

பழமைக்கு தீவைக்கும் "அயலி" காணத் தவறாதீர்கள்...
என்னைய கேட்டா, இந்த அயலியை தமிழக அரசே முன்வந்து, கிராமப்புறங்களுக்கு கொண்டு சேக்கணும். குறிப்பா பெண்கள் படிக்கக்கூடிய அரசு பள்ளிகளிலாச்சும் திரையிடனும். பள்ளி இடைநிறுத்தல் அதிகமிருக்கும் கிராமங்களில் இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும். பெண்களுக்காக பல நலத்திட்டம் செய்யும் திராவிட அரசு, இதையும் நிச்சயமா செய்யலாம்..
பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும்  'அயலி' பற்றிய பாராட்டுக்கள் மகிழ்ச்சியளிக்கிறது

குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பிரியங்கா சோப்ரா...

உலகாளவில் பிரசித்தியான பிரியங்கா சோப்ரா தனது குழந்தையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். அந்த போட்டோக்காள் தற்போது வைரலாகி வருகிறது.

உலகளவில் பிரபலமான பிரியங்கா சோப்ரா தனது துறையில் கொடி கட்டி பறந்து வருவதோடு, சமூக செவைகளாலும் உலகளவில் ரசிகர்களைக் கொண்டவர். நடிகை பாடகி என பன்முகை தன்மை கொண்டவரான பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து, ஹாலிவுட்டிற்கு கால் தடம் பதித்தார்.

எந்த வித உதவியும் இன்றி பின்னணியும் இல்லாமல் இன்று ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த பிரியங்கா சோப்ரா, தனது பல நாள் காதலரான நிக் ஜோனசை அமெரிக்க மற்றும் இந்திய முறை படி திருமணம் செய்து கொண்டார். உலகளவில் இது மக்கள் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | ‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...

இந்நிலையில், சரோகசி, அதாவது வாடகை தாய் மூலம், தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். மாலதி மேரி என்ற பெயர் கொண்ட அவரை இது வரை அதிகமாக மக்கள் முன்பு அறிமுகப்படுத்தாமல் இருந்த நிலையில், தற்போது அவரை தனது மடியில் அமர்த்தி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் பிரியங்கா.

வெள்ளை மற்றும் மங்கிய வெள்ளை நிற ஆடையில் தேவதை போல் ஐருந்த மாலதி மேரியை தனது கைகளில் தூக்கி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த பிரியங்காவின் போட்டோக்கள் இணையத்தில் தற்போது படு வைரலாகி வர, ரசிகர்கள் பலரும் அந்த குழந்தையைக் ஒஞ்சி பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...

 

‘கேப்டன்’ திருமண நாளுக்கு குவியும் வாழ்த்துகள்...

கேப்டன் விஜயகாந்த் திருமண நாளுக்கு aனைவரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

பல லட்ச ரசிகர்கள் கொண்ட தென்னிந்திய ஹீரோக்களில், நிஜ வாழ்விலும் தனது சிறப்பால் அதே அளவு உண்மையான ரசிகர்களைக் கொண்டவர் தான், கருப்பு எம்.ஜி.ஆர் என பலராலும் அன்பாக அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த்.

அவரது தானங்கள் மற்றும் உதவிகள் மூலம் பல லட்ச மனங்களை சம்பாதித்த விஜயகாந்த், மக்களுக்காக தனது நலத்திட்டங்களை அதிகாரத்தில் நின்று செய்ய வேண்டும் என்பதற்காக, அரசியலில் குதித்தார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சி தலைவராக பல வகையான நன்மைகள் செய்து பெரும் புரட்சியையே ஏற்படுத்தினார் என்று தான் கூற வேண்டும். ஆனால், சமீபத்தில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது.

மேலும் படிக்க | 'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்...

அதிகமாக பொது வெளிகளில் வராத நிலையில், பல வகையான சிகிச்சைகளுக்குப் பிறகு தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு விஜயகாந்த் வெளிவந்தார்.  இந்நிலையில், இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் விஜயகாந்திற்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில், இயக்குனர் மற்றும் நடிகர் விஜயின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் விஜயகாந்தை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த போட்டோ இணையத்தில் தர்போது வைரலாகி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...

'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பா.ரஞ்சித்...

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் 'பொம்மை நாயகி' படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்று வருகிறது.இதில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், நடிகர் யோகி பாபு, இயக்குநர் ஷான், நடிகை சுபத்ரா, நடிகர் ஹரி உள்பட படக்குழு அனைவரும் பங்கேற்றுள்ளனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மேடையில் பேசுகையில்,

பொம்மை நாயகி இயக்குநர் ஷான் இவ்வளவு பேசுவதை முதல் முறை பார்க்கிறேன். அவருடைய நிதானம் இப்போதுதான் புரிந்தது. சினிமா என்பது ஒரு பயங்கரமான கலை. பரியேறும் பெருமாளில் யோகி பாபு நடித்தது பிடித்திருந்தது. அப்போது இந்த கதையில் யோகி பாபு செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மேலும் படிக்க | பட்டு வேட்டியில் பட்டையைக் கிளப்பும் சல்மான் பாய்... ரசிகர்களை சுண்டி இழுக்கும் டீசர்...

இப்படி ஒரு Sensitive ஆன கதையை உருவாக்கும் போது, நியாயமாக மக்களிடம் கூற வேண்டும் என நினைத்தேன். வணிகம் என்றால் இந்த படத்துக்கு யோகி பாபு தான். அவர் வந்த பின்புதான் இது விரிவடைந்தது.  நீலம் தயாரிப்பில் ஒரு படம் செய்கிறோம் என்றால் எனக்கு சமூக பொறுப்புகள் உள்ளது. 

சிறிய படங்களை விற்பது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் ஓடிடியில் விற்கவே முடியாது. அவர்கள் வாங்கும் படங்கள் பெரிய நடிகர்களுடையதுதான். சிறிய படங்கள் வெளியீட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அதுவும் ஓடிடியை தொடர்பு கொள்ளவே முடியாது. 

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்...

திரையரங்கம்தான் ஜனநாயகமான மீடியம் என நினைக்கிறேன். ஆனால் ஓடிடியை நெருங்குவது கடினம். சிறிய படங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிற சூழலில்தான், பொம்மை நாயகி போன்ற படங்களை பெரும் நம்பிக்கையில்  எடுக்கிறோம். 

இந்த படத்தை தயாரித்தது மன நிறைவாக இருக்கிறது என்பதை பெருமையாக கூறுகிறேன். இந்த படத்தில் அனைவரின் நடிப்பும் பேசப்படும். யோகி பாபு நடிப்பில் வேறொரு பரிமாணத்தை பார்க்கலாம். இந்த படம் உங்களை சரியான பாதையில் வழிநடத்தும் என நம்புகிறேன். ஜெய்பீம்.

மேலும் படிக்க | பிறந்த நாளில் உயிரிழந்த நடன கலைஞர்...!

நடிகர் ஷாருக்கான் தனது பதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஷாருக்கான் பதான் திரைப்படம் நாடு முழுவதும் அண்மையில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்த நிலையில் இதனை கொண்டாடும் விதமாக மும்பையிலுள்ள ஷாருக்கான் வீட்டின் முன்பு ஆயிரகணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

அவர்களைச் சந்தித்த ஷாருக்கான் ரசிகர்களை நோக்கி கையசைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார். 

மேலும் படிக்க | பட்டு வேட்டியில் பட்டையைக் கிளப்பும் சல்மான் பாய்... ரசிகர்களை சுண்டி இழுக்கும் டீசர்...