புஷ்பா பாடலுக்கு பாட்டியுடன் நடனம் ஆடிய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா!! இணையத்தில் வைரலான வீடியோ

புஷ்பா பாடலுக்கு பாட்டியுடன் நடனம் ஆடிய  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா!! இணையத்தில் வைரலான வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் பான் இந்திய மூவியாக வெளியாகி இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுவும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் வசனங்கள் அனைத்தும் குறிப்பாக 'THAGADELE' என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் ’சாமி சாமி’, ‘பார்வ கற்பூர தீபமா’ பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுன் போல நடித்து வெளியிட்டு வரும் வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

அந்தவகையில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா தற்போது புஷ்பா படத்தின் ’ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் இணைந்து நடனம் ஆடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வீடியோவை டிரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.