2,000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டணி கருத்து..!

2,000 ரூபாய்  நோட்டு மதிப்பிழப்பு குறித்து  விஜய் ஆண்டணி கருத்து..!
Published on
Updated on
1 min read

பணத்தினை பதுக்கி வைத்தவர்களுக்கு கஷ்டம்,-  விஜய் ஆண்டனி அம்பத்தூரில் பேட்டி.

விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படத்தின் முதல் பாகம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், அதே  வருடத்தில், இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் 2-ம் பாகம் நேற்று வெளியாகியுள்ள நேரத்தில் ரூ.2000 நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டது, பரபரப்பாகப்  பேசப்பட்டது.  

ஏனெனில், பிச்சைக்காரன் முதல் பாகம்  படத்தில், பிச்சைக்கார கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த ஒருவர்,  வறுமையை போக்கவும், ஊழலை ஒழிக்கவும் சிறந்த அழி என்ன என்ற கேள்விக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தாலே ஊழலை  ஒழிக்கலாம் என விமர்சித்திருப்பார்.  அதே போல அந்த ஆண்டே 500,1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பை மத்திய அரசு அறிவித்தாது. அது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அதே போல இந்த ஆண்டு, பிச்சைக்காரன் 2 வெளியாகும் சமயத்திலே தற்போது 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு ஆய்விக்கப்பட்டிருப்பதால் இரண்டுக்கும் ஏதேனும் சமபந்தம் இருக்குமோ என பல சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இவ்வாறிருக்க,  பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அம்பத்தூரில் உள்ள திரையரங்கில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் காண வந்தவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.மேலும், வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்பொழுது பேசுகையில் விரைவில் பிச்சைக்காரன் 3 வெளியாகும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 2000 ரூபாய் செல்லாது என அறிவிக்க பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,  பணத்தினை பதுக்கி வைத்திருப்பவர்கள் வறுத்த படுகின்றனர்; பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com