மீண்டும் வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி..!!

மீண்டும் வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் விஜய் சேதுபதி..!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்துமே வித்தியாசமான கதைக் களங்களை கொண்டிருக்கும். இதனால் தானோ என்னவோ இவரது படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக உள்ளன.
 
அந்த வகையில் விஜய் சேதுபதி திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது 96 தான். இப்படம் விஜய்சேதுபதி திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இளைஞர்கள் பலரது கனவு படமாகவே இப்படம் உள்ளது. பள்ளி காதலை நினைவு கூறும் விதமாக உருவாகியிருந்த இப்படம் தற்போது வரை அனைவரது மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். தமிழில் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்காகி அங்கும் பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இதே கூட்டணி அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் பிரேம் குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

தற்போது விஜய் சேதுபதி தன் கைவசம் இருக்கும் படங்களை நடித்து முடித்து விட்டு பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் இவ்வளவு படங்களில் விஜய் சேதுபதி எப்படி நடிக்கிறார் என ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக நடிகர்களுக்கும் ஆச்சரியமாக உள்ளது. அதேபோல் பட வாய்ப்புகளும் இவரை தேடி குவிந்த வண்ணம் உள்ளன.