’தேவர் மகன் 2’ படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கபோகும் ‘விக்ரம்’ பட ஹீரோ?

நடிகர் கமல் அடுத்ததாக நடிக்கவுள்ள ”தேவர் மகன் 2” திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகன் கேரக்டரில் “விக்ரம்” படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’தேவர் மகன் 2’ படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கபோகும் ‘விக்ரம்’ பட ஹீரோ?
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் கமல்ஹாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்து கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான  “தேவர்மகன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கெளதமி மற்றும் ரேவதி இருவரும் நடித்திருந்தனர்.

இன்றளவும் இத்திரைப்படத்தின் மெளவுசு குறையாமல் தான் இருந்து வருகிறது. இப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘தேவர் மகன் 2’ பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ’தேவர் மகன் 2’ பாகம் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தேவர் மகன் படம் வெளியாகி கிட்டதட்ட 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், “தேவர்மகன் 2” பாகத்தில் கமல்ஹாசனின் மகன் தான் முக்கிய கேரக்டராக வலம் வரும் என்று கூறப்படுகிறது.

அதுவும் அந்த மகன் கேரக்டரில், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தான், ‘தேவர் மகன் 2’ படத்தில் கமலுக்கு மகனாக நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com