நண்பர்களுடன் ஜாலியாக போஸ் கொடுக்கும் விஜய்யின் மகள்.. வைரல் புகைப்படம் 

விஜய்யின் மகளான திவ்யா தன்னுடன் படிக்கும் மற்ற மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நண்பர்களுடன் ஜாலியாக போஸ் கொடுக்கும் விஜய்யின் மகள்.. வைரல் புகைப்படம் 

விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்தவர். பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது “பூவே உனக்காக” திரைப்படம் தான் அது தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் . தளபதி விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மற்றும் 32 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். விஜயின் நடிப்பும் அவருடைய நடன திறமையும் ரசிகர்களிடையே அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை மணமுடித்தார்.

அவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் . தற்போது விஜய்யின் மகளான திவ்யா தன்னுடன் படிக்கும் மற்ற மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.