’’விஜய் பெற்றோர்களுக்கு செய்தது எனக்கு எரிச்சலாக இருந்தது” - பேட்டியில் புலம்பி தள்ளிய கங்கை அமரன்!

’’விஜய் பெற்றோர்களுக்கு செய்தது எனக்கு எரிச்சலாக இருந்தது” - பேட்டியில் புலம்பி தள்ளிய கங்கை அமரன்!
Published on
Updated on
1 min read

80-யிஸ்களில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகவும், சிறந்த இசையமைப்பாளராகவும் திகழ்ந்து பல கிளாசிக் படங்களையு, ஹிட் பாடல்களையும் கொடுத்து வந்தவர் தான் இசையமைப்பாளர் கங்கை அமரன். இப்படி பன்முக திறமைக்கொண்ட இவர் இன்றளவும் திரைப்படங்களில் தனது கலைத்திறமையை காமித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் திரைப்படம் ஒன்றின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்கை அமரன் நடிகர் விஜய் குறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் பேசியுள்ளார்.  

அதாவது,  " சமீபத்தில் விஜய் தனது அப்பா அம்மாவை தள்ளிவைத்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.  நான் ஓப்பனாக சொல்கிறேன், எனக்கு ஒன்னும் பயம்மில்லை. நாங்களெல்லாம் பெரியவர்கள் விமர்சனங்களை சொல்லத்தான் செய்வோம்.

நாங்களெல்லாம் அப்போதே ஒன்றாக SAC-ன் நாடகத்திற்கு வாசித்தவர்கள்.  அப்படி வாசித்த போது விஜய் குழந்தை. அப்போதெல்லாம் நாங்கள் அவரை கொஞ்சிட்டு போவோம்.

விஜய்யை அவரின் பெற்றோர்கள் எப்படி வளர்த்தார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததால், எனக்கு இந்த செய்தியை கேட்டதும் விஜய் மீது அவ்வளவு எரிச்சலாக இருந்தது" என அவர் அந்த பேட்டியில் பேசியுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com