பெண் தோழியுடன் காரில் டான்ஸ் போடும் விஜய் மகன் சஞ்சய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜய் மகன் சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஓடிக்கொண்டே படு ஹாயாக பெண் தோழியுடன் பாடல் கேட்டுக்கொண்டு, ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
பெண் தோழியுடன் காரில் டான்ஸ் போடும் விஜய் மகன் சஞ்சய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ
Published on
Updated on
1 min read
தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் தளபதி விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜய்க்கு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்ற மகளும் பிறந்தனர். 
விஜய் மகள் திவ்யா, தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்து இருந்தார். அதே போல விஜய் மகன் சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் வரும் இண்ட்ரோ சாங் "நான் அடிச்சாதாங்கமாட்ட" என்ற பாடலில் ஒரு காட்சியில் நடன மாடியிருந்தார். விஜய் மகளுக்கு பேட்மிட்டன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால், விஜய் மகனுக்கு சினிமாவில் தான் ஆர்வம் அதிகம்.
சினிமாவில் ஜேசன் சஞ்சய்க்கு ஆர்வம் அதிகம் என்பதால், கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்  அந்த குறும்படம் வெளியான நிலையில் சமீபத்தில்,‘சிரி ‘ என்ற குறும்படம் வெளியாகியது.
சமீபத்தில் சஞ்சய்யின் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கார் ஓடிக்கொண்டே படு ஹாயாக பாடல் கேட்டுக்கொண்டு காரையும் ஒட்டி செல்கிறார். இப்படி கேட்டுக்கொண்டு நிலையில் தற்போது மீண்டும் ஒன்று வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் காருக்குள் தனது பெண் தோழி மற்றும் நண்பர்களுடன் பாடல் போட்டுகொண்டு கும்மாளமடித்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது. 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com