இந்தியாவிலே முதல் இடம் பிடித்த விஜயின் மாஸ்டர் படம்...

இந்தியாவிலே முதல் இடம்  பிடித்த விஜயின் மாஸ்டர் படம்...

பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'மாஸ்டர்'. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

கொரோனா ஊரடங்கு பிறகு வெளியான உச்ச நட்சத்திரத்தின் முதல் படம் என்ற பெருமையை பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் பெற்றது. 50 சதவீத இருக்கை அமல்படுத்தப்பட்டதால், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில் பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐ.எம்.டி.பி-யின் 2021-ம் ஆண்டு பிரபல இந்தியப் படங்களின் வரிசையில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 4வது இடத்தையும், மாரி செல்வராஜ இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் 6வது இடத்தையும் பிடித்துள்ளன.