"விக்ரம்" திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை!!

"விக்ரம்" திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான விக்ரம் திரைப்படம் இரண்டு நாட்களிலேயே உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசிலின் சிறப்பான நடிப்பு அனைத்து தரப்பினரையும் ஈர்த்துள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் சிறப்பு தோற்றம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடிரூபாய், பிற மாநிலங்களில் 15 கோடி ரூபாய், உலக அளவில் 55 கோடி ரூபாய் வசூல் செய்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.