அரபிக் இசைக்கு பச்சை சேலையில் என்னமா ஆடுறாங்க!!.. மயக்கத்தில் ரசிகர்கள்

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் மூலம் அதிக ரசிகர்கள் பெற்றவர். தொடர்ந்து பிக் பாஸ் 4 வது சீசனில் நடித்து பட்டையை கிளப்பினார்.

அரபிக் இசைக்கு பச்சை சேலையில் என்னமா ஆடுறாங்க!!.. மயக்கத்தில் ரசிகர்கள்

நடிகை ஷிவானி நாராயணன் ரெட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களை பெற்றார். இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்தது, கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்து வரும் "விக்ரம்" படத்தில் ஷிவானி முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் தான் ஷிவானி நாராயணன். இவர் தின்தோறும் ஒரு புகைப்படமாவது வெளியிட்டு வருவார். இவர் இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் Followers வைத்திருக்கிறார்.

இந்நிலையில், அரபிக் இசைக்கு அவர் பச்சை சேலையில் ஆடியுள்ள டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது. அரபிக் மியூசிக்கில் தென்னிந்திய நடனத்தை புகுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவரது டான்ஸை ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்த வருகின்றனர்.