என்ன சொல்ல போகிறாய் என்ன சொல்ல போகிறாய்” பாடகர் சங்கர் மகாதேவன் 56- வது பிறந்தநாள் இன்று

இசை
உலகத்தில் அன்பு,கோவம்,காதல்,விரக்தி,தோல்வி,மகிழ்ச்சி,மனநிலை எப்படி இருந்தாலுமே உடனே மாற்றக்கூடிய சக்தி பாடல்களுக்கு மட்டுமே உள்ளது. அப்படி பட்ட பாடல்கள் நம்ம வாழ்விலும் வந்து வந்து போகும் காலத்துக்கு ஏற்றார் போல மாறி மாறி ஒலிக்கும் அந்த பாடல்கள் முதலில் கேட்க ஆரம்பித்து. பிறகு பித்து பிடித்து போகும் அளவிற்கு பிடிக்கும். அந்த பாடலை நாம் கொண்டாடுவதை காட்டிலும் அந்த பாடலை பாடிய குரலுக்கு நாம் பித்து பிடித்துவிட்டோம் என்பதை கால போக்கில் உணர்த்தும். பிறகு ஒரு பாடலில் பாடகர், பாடகியின் குரல் பிடித்துவிட்டால் அவர்கள் பாடிய பாடல்களை அனைத்தையுமே தேடி தேடி கேட்க ஆரம்பிப்போம். ஆம் அதுவும் மறுக்க முடியாத உண்மையாக இருக்கும். பாடலுக்கு அவர்களின் வசம் இழுப்பதே சிறப்பு. அப்படிபட்ட குரலுக்கு சொந்தகாரான சங்கர் மகாதேவனின் 56 வது பிறந்த தினம் இன்று.
மேலும் படிக்க | உயர்த்தப்பட்ட ஆசிரியர்களின் கல்வி செலவு தொகை... எவ்வளவு?
56 -வது பிறந்தநாள் சங்கர் மகாதேவன்
கேரளாவில் தமிழ் பேசும் குடும்பத்தை சார்ந்தவர். வீணை வாசிப்பதில் வல்லவர்
மென் பொறியாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பின்பு இசை துறையில் நுழைந்தார்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் என்ன சொல்ல போகிறாய் பாடலுக்கு தேசிய விருது பெற்றவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னட மொழிகளிலும் தெரிந்தவர்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மொழியிலும் இசை அமைத்துள்ளார். 2011 ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு முகப்பு பாடலை பாடியவர்.1998 ஆம் ஆண்டு இவருடைய முதல் இசை தொகுப்பில் ப்ரீத் லெஸ் பாடல் இவரை பிரபலமாக்கியது.
மேலும் படிக்க | இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக பெரிய தோல்வி...ஈபிஎஸ்சை குற்றம் சாட்டும் டிடிவி!
மகாதேவனின் மனம் மயக்கும் பாடல்கள்
- என்ன சொல்லபோகிறாய் ?
- வாடி வாடி நாட்டுகட்ட
- கொக்கு மீன தின்னுமா
- நீயா பேசியது
- உப்பு கருவாடு
- தனியே தன்னந்தனியே போன்ற பல மனம் மயக்கும் பாடலுக்கு சொந்தகாரன்.