#Exclusive ஏர்லைன்ஸ் வேலையை விட்டப்போ என்னோட பேங்க் பேலன்ஸ் ரூ.320 தான்... வாணிபோஜனின் பிரத்யேக பேட்டி 

நடிகை வாணிபோஜன் தனது வாழ்வின் கனவுகள் குறித்து மாலை முரசுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

#Exclusive ஏர்லைன்ஸ் வேலையை விட்டப்போ என்னோட பேங்க் பேலன்ஸ் ரூ.320 தான்... வாணிபோஜனின் பிரத்யேக பேட்டி 

சிவகார்த்திகேயன், சந்தானம் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குப் போய் ஹிட்டானவர் நடிகை வாணிபோஜன். தெய்வமகள் சீரியலில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்த அவருக்கு சில்வர் ஸ்க்ரீனில் ஓ மை கடவுளே படம் பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்தது.

Actress Vani Bhojan Archives - Kalakkal Cinema

அதைத் தொடர்ந்து லாக்கப், மலேசிய டூ அம்னீஷியா படங்களில் நடித்தவர், நடிகர் ஜெய்யுடன், ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸிலும் நடித்தார். தற்போது தமிழில் நிறைய படங்கள் கைவசம் வைத்திருக்கும் வாணி போஜன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் விக்ரமுடன் நடிக்க உள்ளார். அவருடன் அழகான உரையாடல். 

முன்னாடி மொத்தமும் தெரியும்படி என்னம்மா உடை இது? ஹீரோயின் ஆனதும் வேலையை  காட்டிய வாணி போஜன் - Cinemapettai

நடிகை ஆகணும்’ங்கிறது தான் உங்க கனவா? 

உண்மையை சொல்லணும்’னா, எனக்கு சின்ன வயசுல இருந்து ரெண்டு கனவு தான் இருந்தது. ஒண்ணு ஏர் ஹோஸ்டஸ் ஆகணும், அப்புறம் என்னோட அப்பா போட்டோகிராபர்’ங்கிறதால மாடலிங் பண்ணனும்’னு ஆசை இருந்தது. ஆனா என்னோட சமூகம் ரொம்ப சின்னது, இந்த மாதிரியான வேலைகளை ஏத்துக்க மாட்டாங்க. ஆனாலும் எப்படியோ என்னோட ரெண்டு கனவும் நிறைவேறிடுச்சு. 

புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை மடக்கும் வாணி போஜன்.! -  tamil360newz

அப்புறம் எப்படி சினிமா பீல்டுக்கு வந்தீங்க? 

முதல்ல நான் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ல வொர்க் பண்ணேன். அப்புறம் இண்டிகோ’ல ஏர் ஹோஸ்டஸ்’ஆ வேலை பார்த்தேன். ஏர்லைன்ஸ் என்னோட கனவு வேலைங்கிறதால 3 வருஷம் அதுலயே போச்சு. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ல சூப்பிரவைசரா வேலை பார்க்கும் போது தான் ஸ்பைஸ்ஜெட்’ல மேனேஜர் ஆகுற சான்ஸ் கிடைச்சது. 

Vani Bhojan (Indian Actress) Wiki, Biography, Age, Height, Family, Career,  Awards, and Many More

ஆனா அப்போ, நான் பி.ஏ. (ஆங்கில இலக்கியம்) டிகிரி கூட முடிக்கல, அதனால மேனேஜர் வேலை கிடைக்கல. அதை நம்பி நான் இருந்த ஏர்லைன்ஸ் வேலையை விட்டப்போ என்னோட பேங்க் பேலன்ஸ் வெறும் ரூ.320 தான் இருந்தது. அதுக்குப் பிறகு என்னோட பிரண்ட் கொடுத்த யோசனைப்படி விளம்பர  மாடல் ஆனேன். ஆனா அப்போ ஒழுங்கா இங்கிலீஷ் கூட பேச வராது. 

Vani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்!  | vani bhojan looks stunning in her latest photoshoot - Tamil Oneindia

இப்போ உங்களோட வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க? 

நல்லாவே ஞாபகம் இருக்கு. 320 ரூபாய் வச்சுட்டு கஷ்டப்பட்ட அதே சென்னையில் இப்போ சொந்த வீடு, சொந்த கார் வச்சிருக்கேன். இதை பெருமையா சொல்லல. எல்லாமே கடின உழைப்பால தான் கிடைச்சிருக்கு. இப்போவும் எனக்கு ஆங்கிலம் சரளமா பேச வராது தான். ஆனா அது தான் பெரிய குவாலிட்டின்னு கிடையாது. அது வெறும் மொழி மட்டும் தான். நீங்க சரியான மனஉறுதியோட இருந்தா இந்த உலகத்தில் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. 

Vani Bhojan Wiki, Age, Boyfriend, Family, Biography, Images - TamilGlitz

சோஷியல் மீடியாவில் பாலோயிங் அதிகமாயிடுச்சு போல? 

ஆமா, ரசிகர்கள் கூட டச்சில் இருக்குறது மூலமா நம்மை அப்டேட் பண்ணிக்க முடியுது. சமீபத்தில் கூட என்னோட போட்டோஷீட்டுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. (சின்னத்திரை நயன்தாரா பட்டம் கொடுத்திருக்காங்களே சும்மாவா)

Vani Bhojan

தெலுங்கு படங்களிலும் நடிக்குறீங்களே? 

ஆமா, விஜய் தேவரகொண்டா தயாரிக்குற மீக்கு மாத்ரமே செப்தா படத்தில் நடிச்சிருக்கேன். டோலிவுட் கவனம் எனக்கு கிடைச்சதில் சந்தோஷம். தமிழில் ஆக்சஸ் பேக்டரி தயாரிக்குற திரில்லர் படத்தில் பரத் கூட நடிக்குறேன். அதே சமயம், சியான் 60’ல முக்கியமான ரோல் கிடைச்சிருக்கு. அதுல செம ஹேப்பி. 

உங்க கைவசம் நிறைய படங்கள் இருக்காமே? 

கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு கூட ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தில் ஹீரோயினா நடிச்சு முடிச்சிருக்கேன். அடுத்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திறவான்னு நிறைய படங்கள் லிஸ்ட்’ல இருக்கு. இது தவிர, சூர்யா சாரோட 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்குற படத்துலயும் நான் நடிக்குறேன்.