கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்? நிரூபரின் கேள்விக்கு அனிருத் கூறிய பதில் என்ன?

’விக்ரம்’ படத்தின் வெற்றி விழாவில் கமல் உங்களுக்கு என்ன பரிசு அளித்தார் என்று கேள்வி கேட்ட போது அசத்தல் பதிலை அனிருத் கூறியுள்ளார்.

கமல் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்? நிரூபரின் கேள்விக்கு அனிருத் கூறிய பதில் என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜீன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது ‘விக்ரம்’ திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு காரை பரிசாக அளித்தார். அடுத்தபடியாக இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களுக்கு ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகர் சூர்யாவுக்கு,  ‘ரோலக்ஸ்’ வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘விக்ரம்’ படத்தின் மலையாள வெற்றி விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ரிப்போர்ட்டர் ஒருவர், ’லோகேஷ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச் பரிசாக கொடுத்த கமல்ஹாசன் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று அனிருத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த அனிருத், ‘விக்ரம்’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்துள்ளார் என்றும், அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசுப்பொருள் என்றும் எல்லோரும் வியக்கும் படியாக அசத்தல் பதிலை கூறினார். 

‘விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு என்னதான் இயக்குனர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று கூறினாலும், படத்திற்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ‘பத்தல பத்தல’ பாடல் ஆகியவை படம் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்...