” அன்புள்ள அம்பேத்கர்” விக்ரமன் எழுதிய கடிதம் ஏன் ஒளிப்பரப்பு செய்யவில்லை ?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பகூடிய நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியும், இதில் பல்வேறு துறைகளில் சாதிக்க விரும்ப கூடியவர்களை மக்களுக்கு காட்டகூடிய நிகழ்ச்சியாகும்.

” அன்புள்ள அம்பேத்கர்” விக்ரமன் எழுதிய கடிதம் ஏன் ஒளிப்பரப்பு செய்யவில்லை ?

பிக்பாஸ் சீசன்6   11 வாரங்கள் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் இருப்பவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவரின் பூர்வீகம் திருநெல்வேலி ஆகும். விகரமன் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் அரசியல் நெறியாளராகவும். 2016 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விண்ணைதாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு மீடியா பணிக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். விசிக கட்சியின் செய்தி வாசிப்பாளாராக களம் இறங்கியவர்.

பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் 

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டியிருக்கிறார். அதாவது முதல்முறையாக அரசியலை தொகுப்பளர்களில் ஒருவரான விகரமனை முதலமுறையாக கொண்டியிருப்பது ரசிகர்களுக்கு மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடக்கத்தில் மற்ற போட்டியாளர்களுக்கு இருந்த ரசிகர்பட்டாளத்தை போல விக்ரமனுக்கு இல்ல. வாரங்கள் செல்ல செல்ல விகரமனுக்கு மட்டுமே அதிகமான ரசிகர் பட்டாளம் அமையும் அளவிற்கு மாற்றியமைத்தார்.

புதிய டாஸ்க்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வாரம் வாரம் ஏதேனும் டாஸ்க் கொடுக்கப்படும் அப்படி கொடுக்கபட்ட டாஸ்க் தான் கானா காணும் காலங்கள் டாஸ்கானது கொடுக்கப்பட்டது இதில் போட்டியாளர்கல் மூன்று ஆசிரியர்கள் 7 மாணவர்கள் என தனியாக பிரித்து தொடக்கப்பள்ளி மேல்நிலை பள்ளி கல்லூரி என மூன்று பாகங்களாக கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் டாஸ்கிற்கிடையே  போட்டியாளர்கள் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிரும் டாஸ்கும் கொடுக்கப்பட்டது.  இதில் கடந்த நினைவுகளை பகிரும் டாஸ்கில் போட்டியாளர்களின் எழுதியவற்றை ஒவ்வொன்றாக படிக்க பட்டது. அதில் குறிப்பாக லெட்டர்கள் படிக்கபட்ட போது அமுகையும் கண்ணீரும் பிக்பாஸ் வீட்டை நனைத்தது என்று தான் சொல்லவேண்டும்.

அம்பேத்கருக்கு விக்ரமனின் கடிதம் 

போட்டியாளர்கள் அனைவரும் எழுதிய கடிதங்கள் ஒன்று ஒன்றாக படிக்கப்பட்டது. ஆனால் விக்ரமன்  ”சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு கடிதம்” ஒன்று எழுதியிருந்தார். அதனை தனியார் தொலைக்காட்சி எடிட் குழு தினமும் ஒளிப்பரப்பகூடிய 1 மணி நேர நிகழ்வில் ஒளிப்பரப்பு செய்யப்படவில்லை . இதில் தான் காட்டவில்லை என 24- 7  நிகழ்ச்சியிலும்  அம்பேத்கருக்கு எழுதிய லெட்டர் முழுவதுமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

 நெட்டிசன்களின் கேள்விகள்

 இந்தநிலையில் சமூக வலைத்தளங்கள் முழுவதுமாக  டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் சட்ட மேதை அவர் எல்லோருடைய தலைவர், இந்த நிலையில் இதற்கு முன்னராக நடைபெற்ற சீசன்களில் காயத்ரி ரகுராம் சேரி பிஹேவியர் என சொல்லப்பட்டதை ஒளிப்பரப்பு செய்தது  விக்ரமன் அம்பேத்கர் என சொல்லிய ஒரே காரணத்துக்காக  ஒளிபரப்பு செய்யப்படாததை தனியார் தொலைக்காட்சியின் மீது கடுமையான கண்டனங்கள் எனவும்  ஏன்? விக்ரம் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம் மட்டும் வாசிக்கப்படவில்லை எனவும் கேள்விகளை வாரி வீசி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் காந்தியே பற்றி பேசும் போது மட்டும் காட்டிவிட்டு விக்ரமன் அண்ணல் அம்பேதகர் பற்றி பேசும் போது மட்டும் ஏன் புறகணிப்பு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியும் தனியார் தொலைக்காட்சியை நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.