
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் கடந்த 9-ம் தேதி முதல் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் ராணுவ மருத்துவராக நடித்திருக்கும் இந்தப் படத்தில் குழந்தை கடத்தல் நிகழ்வுகளை கருவாக வைத்து படம் உருவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களை இழிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று இருப்பதால் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நகைச்சுவை என்னும் பெயரில் பெண்ணை இழிவு படுத்துவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. ஆண் தோற்றுவிட்டதனால் பெண் உடை அணிவித்து கோமதி என்று பெயர் சூட்டி இழிவு செய்யும் காட்சி.இன்னும் எத்தனை காலம்தான் பெண்ணை பலமற்றவளாக சித்திகரிக்க போகிறீர்கள் என பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் சில நல்ல கருத்துக்களை கூறியிருந்தாலும் வாழை இலை போட்டு அறுசுவை உணவு படைத்து சற்று மலத்தையும் உடன் பரிமாறியதற்கு ஒப்பான செயல் ஆகும் அந்த காட்சி. கோமதிகளின் கோபம் ஒருநாள் உங்களை போன்றோரை விரைவில் சுட்டெரிக்கும் இவ்வாறு தனது கோபத்தை வார்த்தைகளால் அவர் கொட்டியுள்ளார் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரிபிரியா.இதனிடையே இது தொடர்பான புகாரோடு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.