உலகநாயகன் கமலஹசானுக்கு சிகிச்சை...என்னவா இருக்கும்???

உலகநாயகன் கமலஹசானுக்கு சிகிச்சை...என்னவா இருக்கும்???

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Highlights from Kamal Haasan's meeting with his welfare club members

மேலும் தெரிந்து கொள்ள | வர்ற 28ம் தேதி கல்யாணம்... “டும் டும் டும்” - அறிவித்த மஞ்சிமா கௌதம் ஜோடி...

ஹைதராபாத் சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமலஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக பரிசோதனை மேற்கொள்வதற்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று இருந்தார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் ஏழாவது மாடியில் அனுமதிக்கப்பட்டு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .சாதாரண காய்ச்சலா அல்லது வேற ஏதேனும் காய்ச்சலா என்ற அடிப்படையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள | படபிடிப்பு முடிஞ்சாச்சு... ‘பத்து தல’ யா எப்போ வர்ற போற மச்சான்?...

Kamal Haasan Photos [HD]: Latest Images, Pictures, Stills of ...

முழுமையான சிகிச்சைக்கு பின்னரே நாளைய அல்லது நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துணிவா? வாரிசா? பரபரப்பின் உச்சத்தில் ரசிகர்கள்

 கடந்த சில மாதங்களில் எப்போ சமூக வலைத்தளங்களை திறந்தாலே வாரிசா துணிவா என்கின்ற செய்திகள் குவிந்துக்கிடக்கிறது.அதுமட்டுமா கூடவே இந்த ரசிகர்களின் சண்டையும் தொடர்ந்துக்கொண்டே போகுது.  ஏற்கனவே அஜித் விஜய் ரசிகர்களுக்கிடையேயான் சொத்து பிரச்சனையும் தீர்ந்த பாடில்லை. இதில் சுவாரஸ்யமே இரண்டு படங்களுமே ஒரு நாளில் திரைப்படம் வெளியாக இருக்கு என்பதே.

 மாறி மாறி கலாய்த்துக்கொள்ளும் ரசிகர்கள் 

அதனாலேயே இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி கலாய்த்துக்கொண்டு, போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களாகவே ஒரு பெரிய பஞ்சாயத்து ட்விட்டர் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது துணிவு திரைப்படத்திற்கு தான் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்

துணிவு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் அவர் துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் ஏற்பாடு செய்வார் என்று வெளிப்படையான கருத்துக்கள் பரவி வருகிறது. அதனால் அஜித் ரசிகர்களும் வாரிசு திரைப்படம் அவ்வளவு தான், தியேட்டரே கிடைக்கவில்லை என்று ஒரு கருத்தை பரப்பி வருகின்றனர். 

இதனால் கடுப்பான ரசிகர்கள் துணிவு திரைப்படத்திலிருந்து இன்னும் ஒரு அப்டேட் கூட வரவில்லை. ஆனால் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலே வெளியாக போகிறது என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி சோசியல் மீடியா ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வாரிசு, துணிவு திரைப்படத்திற்கு இன்னும் தியேட்டர்களே ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அதற்குள்ளாகவே ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டு கொண்டு வருகின்றனர். பொதுவாக திரைப்படம் வெளியாவதற்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்புதான் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு அக்ரீமெண்ட் போடப்படும்.

அந்த வகையில் இன்னும் இந்த இரண்டு படங்களுக்கும் அக்ரிமெண்ட் கையெழுத்தாகவில்லை. பட ரிலீசுக்கு ஒரு வாரம் முன்பு தான் இந்த விஷயங்கள் அனைத்தும் ஒப்பந்தம் செய்யப்படும். அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் பற்றிய மர்மம் இன்னும் சில நாட்களுக்கு நீடித்துக் கொண்டே தான் இருக்கும்.

அறிவு காதலி பெயர் அறிவிச்சுட்டாரு!!!!!!!!!

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தன்னுடைய காதலியின் பெயரை இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு

அறிவு காதலி பெயர் அறிவிச்சுட்டாரு!!!!!!!!!

 உலகளவில் என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலமாக  பிரபலமான ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. தனது காதலி பெயர் மட்டும் அவருடை செல்லப்பெயருடன் இன்டாகிராமில்  அறிமுகம் செய்துவைத்துள்ளார். 

இயக்குநர் பா. ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் இசையில் ரஜினிகாந்த நடித்த காலா படத்தில் உரிமையை மீட்போம் பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு.

 தெருக்குரல் அறிவு :
 அறிவரசு கலைநேசன் எனும் தெருக்குரல் அறிவு ரஜினிகாந்தின் காலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். வடசென்னை , வந்தா ராஜவாதான் வருவேன், நட்பே துணை ,2 -ம் உலகபோரின் கடைசிக்குண்டு , பட்டாஸ், டகால்டி , நாடோடிகள்2 , நான் சிரித்தால் , ஜிப்சி, சூரரைப்போற்று , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் பாடியும் உள்ளார்.


என் ஜாய் என்சாமி பாடல்:
என் ஜாய் எஞ்சாமி பாடலின் மூலமாக பல மில்லியன்களை கடந்த அந்த பாடல் அறிவை உலகளவில் அறிமுகம் செய்தது. உலகளவில் அதாவது வெளிநாடுகளிலும் இசைகச்சேரிகளை நடத்தி வருகிறார்.  இந்த பாடல் மூலம் எவ்வளவு புகழ்கிடைத்ததோ அதே அளவு அறிவை  மனவேதனையும் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.


காதலில் விழுந்த அறிவு
ராப் பாடலின் மூலமாக பலரையும் கவர்ந்த அறிவு அவரை கவர்ந்த காதலி கல்பனாவை   அறிமுகம் செய்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரின் கால்களையும்  காட்டி  for miles together.. we are the wildest love of our ancestors kalpana ambetdkar  என் திமிரான தமிழச்சி என பதிவிட்டுள்ளார் . இதனை பார்த்த அறிவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி என வாழ்த்துமழையில் அறிவு.அப்போ கூடிய விரைவில் திருமணத்தேதி அறிவிப்பார் என நம்பலாம்

மறைந்த முன்னாள் நடிகை சில்க் ஸ்மிதாவின் 63 வது பிறந்த நாளான இன்று அவருடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யார் இந்த சில்க் :

Silk Smitha gave me a glimpse into her mind - Ch Sushil Rao

"சில்க் ஸ்மிதா" என்று அழைக்கப்படும் விஜயலக்ஷ்மி வட்லபதி நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார் . இவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றினார்.1980களின் இந்தியத் திரைப்படங்களில் பல வெற்றிகரமான நடனப் பாடல்களில் ஸ்மிதா ஒரு பகுதியாக இருந்தார்.அவர் ஒரு துணை நடிகையாக தொழில்துறையில் நுழைந்து, மேலும் 1979 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான வண்டிச்சக்கரத்தில் "சில்க்" என்ற பாத்திரத்திற்காக முதலில் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.அவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பாத்திரமாக 1980 களில் மிகவும் விரும்பப்பட்ட  நடிகை.17 வருட கால வாழ்க்கையில், அவர் 450க்கும் மேற்பட்ட படங்களில்,பல மொழிகளில் நடித்துள்ளார்.

ஸ்மிதாவின் பிறப்பு :

Birth anniversary special: 3 movies inspired by Silk Smitha's life | Deccan  Herald

சில்க் ஸ்மிதா, தெண்டுலுரு மண்டலம், ஏலூரில் உள்ள கொவ்வாலி கிராமத்தில் ராமல்லு மற்றும் சரசம்மா ஆகியோருக்கு மகளாக ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்புக்குப் பிறகு குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளியை விட்டு வெளியேறினார் .ஸ்மிதாவின் கண்கவர் தோற்றம் அவர்களை திரை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது, மேலும் அவருடைய  குடும்பம் அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்தது.அவரின் திருமண உறவு அவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் அந்த திருமண வாழ்க்கையிலிருந்து அவர் வெளியேறினார். 

ஸ்மிதாவின் திரைப்  பயணம் :

Silk Smitha's Thara to stun the silver screen - CINEMA - CINE NEWS | Kerala  Kaumudi Online

ஸ்மிதா ஒரு நடிகைக்கான டச்-அப் கலைஞராகத் அவரது பயணத்தை தொடங்கினார். பிறகு சிறிய கதாபாத்திரங்களில் மலையாள இயக்குனர் ஆண்டனி ஈஸ்ட்மேனின் "இணையே தேடி" திரைப்படத்தில் கதாநாயகியாக அவர் தனது முதல் திரைப்படத்தைப் நடித்தார்.ஆனால் திரைப்படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் அவருக்கு "ஸ்மிதா" என்று பெயர் வைத்தார். இயக்குனர் வினு சக்கரவர்த்தி மூலம் தமிழில் அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அவரது மனைவி அவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து, நடனம் கற்க ஏற்பாடு செய்தார் .என்றாலும்,குறிப்பிடத்தக்க காரணமாக அவர் காபரே நடனக் கலைஞர் பாத்திரங்களுக்கு மாறினார் . 1979 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான வண்டிச்சக்கரம் படத்தில் தனது முதல் கதா பாத்திரத்தின் மூலம் அதிக கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயருக்குப் பிறகு "சில்க்" என்ற திரைப் பெயரைப் பெற்றார். ஸ்மிதா தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் சில இந்தி படங்களில் நடித்துள்ளார். மூன்று முகம் போன்ற படங்களில் அவரது நடனம் மற்றும் தைரியமான நடிப்பு அவரை தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னோடியாக மாற்றியது.இவர் தமிழில் ரஜினி,கமல்,பாக்யராஜ் ,பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ஸ்மிதாவின் குணாதிசயங்கள் :

  Silk Smitha's rare pictures | Times of India

சில்க் ஸ்மிதாவுக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் இருந்தது. அவர் உள்முக சிந்தனை கொண்டவர் , யாருடனும் விரைவாக நட்பு கொள்ளவில்லை. அவர்  குறுகிய மனநிலை, மன உறுதி மற்றும் நேரடியான தன்மை கொண்டவர். சிலர் அதை ஆணவம் என்று தவறாகக் கருதினர். உண்மையில், அவர் நேரம் தவறாமல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே திரைப்படத் தொகுப்புகளுக்கு வந்துவிடுவார். பொறுப்பாகவும், லட்சியமாகவும் இருந்தார் ,குறைந்த கல்வியறிவு இருந்தபோதிலும் ஆங்கில மொழியை சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டவர். அவர் ஒரு "மென்மையான" மற்றும் "குழந்தை போன்ற" ஆளுமை கொண்டவராகவும் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்களால் விவரிக்கப்படுகிறார். அவர் ஒப்பனையில் திறமையானவர் மற்றும் தொழில்துறையில் நுழைவதற்கு முன்பு அதை தனது தொழிலாக மாற்றி கொண்டவர். ஸ்மிதாவிற்கு பார்ப்போரை கவர வைக்கும் மீன் போன்ற கண்கள், தங்க நிறம் மற்றும் அழகான உடலமைப்பு ஆகியவற்றுடன் இயல்பாகவே அழகாக இருப்பார்.

ஸ்மிதாவின் அறியாத உண்மைகள் :

Truth About Silk Smitha's Life: Forced Marriage, Queen Of Sensuality,  Mysterious Death And Much More

நடிகை சில்க் ஸ்மிதா ஒரு அழகான , கவர்ச்சியான நடிகை மட்டுமில்லாமல் தனது திரைப்பட உலகில் அப்போது இருந்த கதாநாயகிகளை விட இவருக்கு மௌசு அதிகமாக இருந்தது.சிவாஜி கணேசன் ,ரஜினி போன்ற முன்னணி நடிகர்களே சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்காக காத்திருந்த காலம் அது.பொதுவாக எந்த ஒரு நடிகையும் தயாரிப்பாளர் முன்பு மரியாதையாகவும் பணிவுடனும் நடந்து கொள்வார்கள் ,ஆனால் ஸ்மிதா அவ்வாறு இல்லை காலணிகள் அணிந்த வாறே கால் மேல் கால் போட்டு கொண்டுதான் பேசுவாராம்.இவரது சிறப்பை குறித்து பல நடிகர் நடிகைகள் புகழ்ந்து பேசியுள்ளார்கள்.மேலும் இவர் தனக்கு சம்பளம் போடுவதை விட தனக்கு கீழ் வேலை பார்க்கும் வேலையாட்களுக்கு தான் முதலில் சம்பலம் போட சொல்வார்.அடிப்படையில் நல்ல மனம் கொண்ட ஒரு கதாநாயகி சில்க் ஸ்மிதா என்றால் அது மிகையாகாது .

ஸ்மிதாவின் இறப்பு ரகசியம்  :

செப்டம்பர் 23, 1996 அன்று காலை, தன் தோழியான நடனக் கலைஞரான அனுராதாவைத் தொடர்பு கொண்டு, தன்னைத் தொந்தரவு செய்யும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினார் . அனுராதா தன் குழந்தையைப் பள்ளியில் இறக்கிவிட்டுப் பிறகு பார்க்கத் திட்டமிட்டார்.அனுராதா அன்று காலை வந்து பார்த்தபோது,ஸ்மிதா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஸ்மிதாவின் உடலில் அதிக அளவு ஆல்கஹால் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது .

Silk Smithas Last Letter Before Death Expressing Her Tragic Life Goes Viral  | Silk Smitha: ''அவர் என்னை ஏமாற்றினார்..'' இறப்புக்கு முன் சில்க் எழுதிய  கடிதம்? வைரலாகும் லெட்டர்!

சில்க் ஸ்மிதாவின் வீட்டில் இருந்து தற்கொலைக் குறிப்பை போலீசார் மீட்டனர், அந்த கடிதத்தில் "என்னை எல்லோரும் நன்றாக பயன்படுத்தி கொண்டார்கள், என் உழைப்பால் நிறைய பேர் முன்னேறி இருக்கிறார்கள், எனக்கானவர்கள் யாரும் இல்லை இந்த உலகத்தில் ,என் குடும்பம் தான் எனக்கு எல்லாமே ஆனால் அவர்களுக்கும் என்னை பிடிக்கவில்லை,இனி இந்த உலகத்தில் எனக்கு இடமில்லை" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்து கொண்டார் .இன்று அவருக்கு 63வது பிறந்த நாள் ,அவரது ரசிகர்கள் மனதில் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .இந்த உலகத்தில் அவர் இல்லை என்றாலும் மக்கள் நினைவில் இன்று வரை மறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அவரது புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர் .

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "அவதார்". இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? வெளியான அப்டேட்...குஷியில் ரசிகர்கள்!


வெளியாக என்ன சிக்கல் ?

Avatar | Movies Anywhere

இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் ஏற்கனவே மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பல மடங்கு கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. தற்போது விநியோகஸ்தர்கள் அதிக அளவு பங்குத் தொகை கேட்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் பங்குத்தொகை வழங்கப்படும். ஆனால் இப்படத்திற்கு 70சதவீதம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட விநியோகஸ்தர்கள் நீ நான் என்று போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதனால் விநியோகஸ்தர் உறுதியான பிறகே பங்குத்தொகை குறித்து பேச்சு நடைபெறும் என்கின்றனர். 

மேலும் படிக்க | இந்திரா காந்தியாக மாறிய நடிகை கங்கனா ரனாவத்...

தமிழ்நாட்டில் வெளியாகுமா ?

  Avatar' re-release eyes USD 7-12 million opening at box office | English  Movie News - Times of India

இன்னும் வெளியீட்டிற்கு இரண்டு வாரங்கள் இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு எடுக்கப்பட்டு அவதார் 2 திரைப்படம் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே கேரளாவில் இதே நிலை நீடித்தால் அவதார் படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் தமிழ்நாட்டிலும் மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

”வாரிசு” திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ”வாரிசு”. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. 

ரஞ்சிதமே பாடல்:

இதனிடையே, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “ரங்சிதமே” பாடல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன் இசையில் நடிகர் விஜயின் குரலில் வெளியான இந்த பாடல், 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்க்கொடி தூக்கிய சங்கம்:

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “வாரிசு” பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால்,  பொங்கலுக்கு ( தெலுங்கில் சங்கராந்தி) ”வாரிசு” படத்தை தெலுங்கு திரையுலகில் வெளியிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பியது. அன்றைய தினம் எங்களுடைய தெலுங்கு படத்தை தான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போர்க்கொடி தூக்கியதாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு திரையரங்குகள் கிடைக்காததாலும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியானது.

இதையும் படிக்க: "டும் டும் டும்"....காதல் ஜோடிக்கு எளிமையான முறையில் நடந்து முடிந்த திருமணம்...

அடுத்தடுத்த பிரச்னை:

விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு பங்சமே இருக்காது என்பது தெரிந்த ஒன்றே, அதில் “வாரிசு” மட்டும் விதிவிலக்கல்ல. திரையிடுவதில் ஏற்பட்ட பிரச்னையையடுத்து, படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி வந்தனர். அதன்படி, வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வரும் நிலையில், உரிய அனுமதி பெறாமல் யானைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

படக்குழுவினற்கு நோட்டீஸ்:

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரச்னையான நிலையில், வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி யானையை பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

படக்குழுவின் முடிவு என்ன?:

“வாரிசு” படத்திற்கு அடுத்தடுத்து வரும் பிரச்னையில் இந்த விவகாரம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், விலங்குகள் நல வாரியத்திற்கு விளக்கம் அளிக்க படக்குழு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியானது. அந்த வகையில் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தவில்லை எனவும் பூஜைக்கு மட்டுமே அழைத்துவரப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட இருப்பதாகவும், மேலும் யானைகளை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சிகளை சேர்க்கலாமா எனவும் தயாரிப்பு தரப்பு தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு:

இந்நிலையில் தமிழ் ,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்புகளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பை, வாரிசு படத்தை பிரிட்டனில் விநியோகம் செய்யும் அகிம்சா என்டர்டைன்மென்ட் ”வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என்ற அறிவிப்பை சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானதும் ரசிகர்கள் அதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.