ரொம்ப வெட்கப்பட வச்சுடீங்களே டைரக்டரே.... சூர்யாவின் இந்த ட்வீட்க்கு இது தான் காரணம்? 

டைரக்டர் தன்னை ரொம்ப வெட்கப்பட வைத்து விட்டார் என்று  நடிகர் சூர்யா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரொம்ப வெட்கப்பட வச்சுடீங்களே டைரக்டரே.... சூர்யாவின் இந்த ட்வீட்க்கு இது தான் காரணம்? 

சூர்யாவின் ரசிகர்கள் அவருடைய டிவீட்டை  கலாய்த்தும், பாராட்டியும்  கமெண்ட் செய்து வருகிறார்கள். டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் முதன் முறையாக  கிறிஸ்துமஸ்சிற்கு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பிறகு பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சூரி,வினய்,சத்யராஜ் ஆகிய பல முக்கிய கதாபாத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிசம்பர் 17- ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் செகண்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் சூர்யா வித்தியாசமான கெட்அப்பில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். உள்ளம் உருகுதைய்யா அழகா...அழகா...உள்ளம் உருகுதைய்யா என துவங்கும் இந்த மெலடி பாடலில் சூர்யா முருகக் கடவுள் கெட்அப் மற்றும்  ராஜா கெட்அப்களில் தோன்றி சூர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாடல் பற்றி சூர்யா பதிவிட்டுள்ள ட்வீட்டில், நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப வெட்கப்பட்ட பாடல்....டைரக்டரே என பதிவிட்டுள்ளார். சூர்யா முருகன் வேடத்திலும், ராஜா வேடத்திலும் தோன்றியதை வைத்து கலாய்த்து கமெண்ட் செய்தும், மீம்கள் உருவாக்கியும் வருகின்றனர்.