" ஒரு ஹீரோவுக்கு நெருக்கடி இருந்தால் தான் ஹீரோ" - இயக்குனர் மிஷ்கின்

டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சியின் துவக்க விழா நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி காலணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையிலான பல்வேறு வகையான ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இன்று துவங்கி செப்டம்பர் 25 வரை இந்த கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், 
" ஒரு எழுத்தாளன், பார்வையாளன், ஒரு ஓவியன் அல்லது கடவுள் இவர்கள் எல்லாருடைய பார்வையும் இயற்கையை நோக்கி மனிதர்களை நோக்கி, மனங்களை நோக்கி இருக்கும்.‌ இந்த ஓவியங்கள் அதை நமக்கு காட்டுகிறது", என்றும் கூறினார்.

மகளிருக்கு 1000 ரூபாய் அரசு கொடுத்தது குறித்த கேள்விக்கு,.. 

"நமட்டு சிரிப்பு சிரித்தவர், " அப்படியா ?, தெரியவில்லை",  என்றும் லியோ படம் செப்டம்பர் 30-ஆம் தேதி போறோம். ரொம்ப நன்றாக இருக்கும். படம் ரொம்ப நன்றாக வந்திருப்பதாக கேள்வி பட்டேன். விஜய் தம்பியும் படம் பார்த்திருக்கிறார். அவருக்கு படம் ரொம்ப பிடித்திருக்கிறது எனவும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்" என்று கூறினார்.

இந்தியாவை பாரத் என்று மாற்றுவது குறித்த கேள்விக்கு,.. 
அப்படியா.. எதுவுமே கருத்து கிடையாது.  
ஏ. ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குறித்து பேசியவர், அதை நான் பார்க்கவில்லை. ஊரில் இருந்து இப்போது தான் முதல் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்றும், என்னை மாட்ட வைக்காதீங்க. மாட்ட மாட்டேன் என்று ஜாலியாக  பேசினார் இயக்குனர்  மிஷ்கின்.

விஜய்க்கு மட்டும் நிறைய நெருக்கடிகள் இருக்கிறது என்ற கேள்விக்கு,..
" ஒரு ஹீரோவுக்கு நெருக்கடி இருந்தால் தான் ஹீரோ",  எனவும் நான் படம் டப்பிங் பண்ணதை பார்த்தேன் என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com