நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு...!!

நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழப்பு...!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் சென்னையில் இன்று காலமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார்.  அவரின் தந்தை உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.  சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.   இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.  தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள நடிகர் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

அஜித்தின் தந்தை பி சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.  சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று காலை 10 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com