பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் சமந்தா..!

டாப்சி தயாரிக்கவிருக்கும் படத்தில் பாலிவுட்டில் நுழைகிறார் சமந்தா..!
பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் சமந்தா..!
Published on
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருவபர் நடிகை சமந்தா. இவர் அடுத்ததாக நடிகை டாப்சி தயாரிப்பில் உருவாகவுள்ள பாலிவுட் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் ஆடுகளம், படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து அஜித்தின் ‘ஆரம்பம்’, லாரன்ஸுடன் ‘காஞ்சனா 2’, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற இவர், அங்கு வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 

தற்போது பாலிவுட்டில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்சி சமீபத்தில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கி, சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு தனது பட நிறுவனத்தில் வாய்ப்பளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி அவரது முதல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் பாலிவுட் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கும் சமந்தா, அடுத்து பாலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாக சைதன்யாவுடனான விவாகரத்திற்கு பிறகு தனது நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்று வரும் சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com