அப்போ விக்கி நயன் அஜித் படத்தில் இல்லையா?

அப்போ விக்கி நயன் அஜித் படத்தில் இல்லையா?

வாரிசு படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ என்ற படத்துக்கான ஷூட்டிங்கில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார். நாளுக்கு நாள் அந்தப் படத்தில் இருந்து வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளது.

இப்படியிருக்க, மற்றொரு பக்கம் துணிவு முடிந்ததும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏகே 62 படத்திற்காக தயாராகி வருவதாக தகவல்கள் முன்பே வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.

மேலும் படிக்க | மன்னிப்பு கேட்ட சமந்தா... ஆதரவு சொன்ன நெட்டிசன்கள்...

ஆனால், தற்போது அந்த படம் கிவிடப்பட்டுள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. அது உண்மையாக இல்லாமல் இருக்கும் என அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் ரசிகர்கள் கூறி வந்தாலும், அந்த வதந்திகளை உண்மை ஆக்கும் வகையிலும், உறுதி செய்யும் வகையிலும் விக்கி தனது சோசியல் மீடியாவில் இருந்து ‘அஜித் 62’ என்ற தலைப்பை நீக்கியுள்ளார்.

மேலும், அஜித் 62 படத்தில் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி இருக்கிறார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. அதுவும், லைகா தயாரிப்பில், வருகிற 7-ம் தேதி அஜித்திடம் மகிழ்திருமேனி நேரில் சென்று கதை சொல்ல இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் படிக்க | பீப் சாங் பாடிய சிம்புவுக்கு ஏன் இத்தனை பெண் ரசிகைகள்...?

தற்போது லியோ என்ற தளபதி 67 படத்திற்கு புதிய அப்டேட் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் முன்பை விட மிகவும் ஆர்வமாக காத்து வருகின்றனர். இந்த நிலையில், மகிழ் தான் அஜித்தின் அடுத்த படம் வெளியாகும் என்ற நிலையில், அஜித் ரசிகர்கள் இருக்கை நுனியில் அமர்ந்து காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் உயிரிழப்பு...! காரணம் இதோ...