எறும்பளவில் வெளியான ‘எறும்பு மனிதன்’ டீசர்... குவியும் எறும்புகளின் கமெண்டுகள்...

பிரபல மார்வெல் தயாரிப்பான புதிய ‘ஆண்ட் மேன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி மக்கள் மட்டுமல்லாது எறும்புகளின் வரவேற்பையும் பெற்று வருகிறது.
எறும்பளவில் வெளியான ‘எறும்பு மனிதன்’ டீசர்... குவியும் எறும்புகளின் கமெண்டுகள்...
Published on
Updated on
2 min read

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பல வகையான் சூப்பர் ஹீரோ படங்கள் வெளியாகி, பல கோடி ரசிகர்கள் உலகளவில் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தற்போது மார்வெல் தயாரிப்புகளில் ஒன்றான ‘தி ஆண்ட் மேன்’ அதாவது எறும்பு மனிதன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகி வருகிறது.

இப்படத்தின் தைகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியானதையடுத்து, இது வரையில்லாத ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜியை இந்த படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். அது என்னவென்றால், படத்தி தலைப்புக்கேற்றவாறு, “தி ஆண்ட் மேன்” படம் அதாவது, “எறும்பு மனிதன்” படத்தின் டீசரை, எறும்பளவில் வெளியிட்டு, எறும்புகளிலும் ரசிகர் கூட்டத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் ‘தி ஆண்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் - குவாண்டமேனியா’ படத்தின் டீசர் இரண்டு வீடியோக்களாக வெளியாகியுள்ளது. சாதாரணமாக வெளியாகும் 1080 பிக்சல் டீசர் மட்டுமின்றி, எறும்பளவில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகவும் சிறிய அளவிலான இந்த டீசர் வீடியோவில் அவ்வளவு தெளிவாக இல்லாத நிலையில், எறும்புகளுக்காக அது வெளியிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. நேற்று வெளியான இந்த இரண்டு வீடியோக்களில், எறும்பளவில் வெளியான டீசர் தான் அதிக அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது என்றே சொல்லலாம்...

மேலும், உலகளவில் ரசிகர்கள் கொண்ட நிலையில், மார்வெல் ஸ்டூடியோசின் ரசிகர்கள் அந்த எறும்பளவு வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், பல கமெண்டுகள் நகைச்சுவையாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிலர், “எறும்புகள் கூட்டத்தின் சார்பில், இந்த படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்” என்றும், “எறும்பாகிய நான் இந்த படத்தை வரவேற்கிறேன்” என்றும், “ஜெல்லீ மீனாகிய நான், எறும்பு மனிதனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்” என்றெல்லாம் கமெண்ட் செய்து கேலி செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் மிகவும் கவனம் ஈர்த்தது ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மைக்கெல் மேஜர்ஸ், குவாண்டம் உலகில் உள்ள ஒரு மனிதராக, அதாவது Nathaniel Richards/ Kang le Conquérant என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தான்.

மேலும், படம் வருமாண்டு 17 பிப்ரவரி மட்டுமே வெளியாக இருக்கும் நிலையில், இவ்வளவு சீக்கிரமாக ஒரு மார்வெல் படம் டீசரை வெளியிட்டதாக சரித்திரமே இல்லை. மேலும், தற்போது வெளியாக தயாராகும் “கார்டியன்ஸ் ஆஃப் கேலக்சி - ஹாலிடே” படத்தின் டீசரோ அல்லது ட்ரெயிலரோ அடுத்த மாதமே எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், திடீரென எதிர்பாராத வகையில் வெளியான இந்த வித்தியாசமான டீசரால் ரசிகர்கள் திடுக்கிட்டு போயுள்ளனர்.

அது மட்டுமின்றி, தற்போது வெளியாகியுள்ள, ‘டி-சி’யின் படைப்பு, ‘ப்ளாக் ஆடம்’ வெளியாகி உலகளவில் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், அனைத்து கவனமும் டி.சி பக்கம் சென்றதாலோ என்னவோ, திடீரென இந்த டீசர் வெளியாகியுள்லது என ஹாலிவுட் பட ரசிகர்கள் ஒரு புறம் விவாதம் நடத்தி வருகின்றனர்.

எது எப்படியோ, படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com