ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்... ரீரிலீசுக்காக ரெடியாகும் ‘பாபா’ படம்...

ஆயிரம் அதிசயம் அமைந்தது பாபா ஜாதகம்... ரீரிலீசுக்காக ரெடியாகும் ‘பாபா’ படம்...

பாபா படத்தின் வெளியீட்டை ஒட்டி, படத்தின் ப்ட்ரெயிலர் த்ற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Published on

கடந்த 2002 ம் ஆண்டு வெளியான ஒரு மாபெரும் ஹிட் படம் தான் பாபா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தை மீண்டும் திரையரங்கில் வெளியாக இருப்பதாக செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத  தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சுமார் 20 வருடங்கள் கழித்து அதே தீவிரத்துடன் தற்போது வெளியாக இருக்கிறது, அதுவும் தலைவர் பிறந்தநாள் அன்றே...

இதனால் படு பயங்கரமாக ஆர்வத்தில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தில் ஆழ்த்த, தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. வி.4.யூ மீடியா என்ற சேனலின் யூடியூப் பக்கம் இந்த படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டு, பார்வையாளர்களை கவர்ஹ்ந்து வருகிறது.

ரஜினிகாந்த் சமீபத்தில் வேறு, படத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய சீன்களுக்கு டப்பிங் முடித்திருந்த போட்டோக்களும் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்த நிலையில், இந்த ட்ரெயிலர் வெளியீடு மேலும் குஷியைக் கொடுத்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com